ஆசியா செய்தி

கராச்சியில் யாசகர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

ரமலான் மாதத்தில் பாகிஸ்தானில் உள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கராச்சிக்கு  யாசகர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலைமை கராச்சியில் பல குற்றச்செயல்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

யாசகர்களின் அதிகரிப்பால் கராச்சியில் தெருக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கராச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இம்ரான் யாகூப் மின்ஹாஸ் கூறுகையில், ரமலான் நோன்புப் பருவத்திற்காக பணம் சேகரிக்க 3,00,000 முதல் 4,00,000 தொழில்முறை யாசகர்கள் கராச்சிக்கு வருகிறார்கள்.

எனவே, வழக்கமான நடவடிக்கைகளால் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

எனவே, குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை அதிகரிக்க வேண்டும் என, பாதுகாப்புப் படையினர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரமலான் மாதத்தில் மட்டும் குறைந்தது 19 குடிமக்கள் கராச்சியில் தெருக் குற்றச் சம்பவங்களில் பலியாகி உள்ளனர்.

இவ்வருடம் திருட்டுக்கு எதிரான போராட்டத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஐ தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!