உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் : சமரச முயற்சியில் சீனா!

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கோரிக்கை என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது ஈரானிய சகாவிடம் தெரிவித்தார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் பேசிய வாங் யி, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர்  ஹோர்முஸ் ஜலசந்தியின் கரையோர நாடாக ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

ஆனால் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

“ஜலசந்தியில் இயல்பான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் ஒருமித்த அழைப்பாகும்,” என்று வாங் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமை போருக்கும் அமைதிக்கும் இடையிலான ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அமைதிக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!