இலங்கை செய்தி

புத்தாண்டு தினத்தில் விபத்துகளினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (14) காலை 7 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நேற்று (13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கலாநிதி ருக்ஷான் பெல்லான மேலும் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை