ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களால் உயிரிழந்த வாகன ஓட்டுநர்!
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஒட்டகங்களால் வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெறற்றுள்ளது.
பாடசாலை பேருந்து இரு ஒட்டகங்கள் மீது மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பேருந்து அணைகரையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்தபோது பேருந்தை அவர் தனியாக ஓட்டிச் சென்றுகொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையாகக் காயமுற்றிருந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இரு ஒட்டகங்களும் விபத்தில் உயிரிழந்துள்ளன.
அதன் உரிமையாளர் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தாருக்குத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
ஒட்டகங்களின் இருப்பிடத்தில் உள்ள வேலியின் கீல்கள் கழன்று காணப்பட்டன என்று அவர் கூறினார்.
(Visited 6 times, 1 visits today)