ஐரோப்பா

அமெரிக்கா விதித்த நிபந்தனையை ரஷ்யா ஏற்கவில்லை – ட்ரம்ப், புட்டின் சந்திப்பு இரத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட் நகரில் இந்த சந்திப்பு நடக்கவிருந்த நிலையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விதித்த நிபந்தனையை ரஷ்யா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள இரகசிய குறிப்பு ஒன்றில், டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் உரிமை ரஷ்யாவுக்கே வழங்கப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை ஒப்புக் கொண்டால் தான் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

அதை ஏற்க அமெரிக்காவும் உக்ரைனும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே ட்ரம்ப், புட்டின் சந்திப்பு இரத்தானதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்