கணவருக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி – வெளியிட்ட ஆதாரங்கள்! நடக்கப்போவது என்ன?
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸ்சில்டா விவகாரம் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பலி போட்டு வருகின்றார்கள்.
இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸ்சில்டா மட்டும் தான் சமூகவலைத் தளங்களில் சண்டையிட்டு வந்தனர்.
ஆனால் தற்போது மாதம்பட்டி ரங்கராஜின் முதன் மனைவி ஸ்ருதியும் களத்தில் இறங்கிவிட்டார்.
இவர் இன்று தனது இன்ஸ்டாகிராமில் ,

நான் கடந்த மார்ச் மாதம் எங்களின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டபோது ஏப்ரல் மாதமே ஜாய் கிரிசில்டா மோசமாக மெசேஜ் அனுப்பினார். எதற்காக அவர் அத்தகைய மெசேஜுகளை அனுப்பி வைக்க வேண்டும்?
இதன் மூலம் அவரின் டபுள் கேம் வெளிப்படுகிறது. அவர் மீடியாவை தனது தனிப்பட்ட மற்றும் பண லாபத்திற்காக பயன்படுத்துவதும் தெரிகிறது. இது எல்லாமே பணத்துக்காக மட்டும். மேலும் எங்கள் குடும்ப அமைதியை கெடுக்க முயற்சி செய்கிறார்.
என் கண்வர் ரங்கராஜை பிரித்து, அவரிடம் பணம் பறிக்கும் ஜாயின் உண்மையான நோக்கம் அவர் கைப்பட எழுதிய கடிதத்திலேயே இருக்கிறது.

அவர் எழுதிய கடிதத்தில், “ரங்கராஜ் என் பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். ரங்கராஜ் என்னை மனைவி என்று அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும். மாதம் ரூ. 8 லட்சம் கொடுக்க வேண்டும். இப்போ எனக்கு ரூ. 10 லட்சம் வேண்டும். ரங்கராஜ் தன் மனைவி ஸ்ருதி பிரியாவை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனக்கு பணமோ, வீடோ வேண்டாம் என்று பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், அவர் எழுதிய கடிதத்தில் வேறு மாதிரி இருக்கிறது.
ஜாய் கிறிஸ்சில்டா விவகாரத்தில் எனது கணவர் ரங்கராஜிக்கு ஆதரவாக இறுதி வரை நிற்பேன். சட்டப்பூர்வ மனைவியான எனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிறிஸ்சில்டா நினைக்கிறார்.
ஸ்ருதியின் இந்த போஸ்ட்டுக்கு ஜாய் கிரிசில்டா என்ன பதில் அளிக்கப் போகிறார், வேறு என்ன பதில் வைத்திருக்கின்றார்? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






