பொழுதுபோக்கு

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’.

அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

game changer

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content