பொழுதுபோக்கு

‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த குஷ்புவின் மகள்

1980-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்புக்கு கடந்த 2000-ம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அவந்திகா வெளிநாட்டில் திரைத்துறை குறித்து படித்து வருகிறார். அவரது இளைய மகள் அனந்திதா மேக்கப் மற்றும் அழகுத் துறையில் பணியாற்றி வருகிறார்.

அழகு மற்றும் மேக்கப் தொழில் தொடங்குபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மேக்கப் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அழகு மற்றும் மேக்கப் துறையில் பணியாற்றி வரும் அனந்திதா தற்போது திரைத்துறையில் உதவி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகை குஷ்பு தியேட்டரில் உதவி இயக்குனர்கள் வரிசையில் அனந்திதாவின் பெயர் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில், “ஒரு பெற்றோராக மணிரத்னம் படத்தில் அவரது சீடராக என் மகளின் பெயரை பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமை தருகிறது. காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவளால் அந்த படத்தில் தொடர முடியவில்லை. இருப்பினும் குறுகிய காலம் அவள் தனது பங்களிப்பைச் செய்தாள். மணிரத்னத்திடமிருந்து அவள் சேகரித்த அறிவும், அவள் கற்றுக் கொண்டதும் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் உதவும். அந்த அனுபவம் உண்மையிலேயே மிகச் செழுமையானது. உங்களுடைய பெரிய மனதிற்கும், அவளுடைய பெயரை தவறாமல் திரையில் பகிர்ந்ததற்கும் நன்றி சார்” என பதிவிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்