துருக்கியில் இராணுவ போர் விமானம் விபத்து – விமானி பலி!
துருக்கியில் இராணுவ விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.
துருக்கிய விமானப்படையின் F-16 போர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.56 மணிக்கு பாலிகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு அருகே இடம்பெற்றது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி விபத்தில் விமானி உயிரிழந்ததை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலேர் (Yasar Guler) உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து பாலிகேசிர் (Balikesir) தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.




