ஈரானின் முக்கிய இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!
இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளங்கள் IRGC மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை இன்று (2) நடத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் மேற்படி தாக்குதலில் ஈரானியப் படையினரின் தரைப்படை முகாம்கள், உயர் தளபதிகள் தங்கியிருந்த நடமாடும் தலைமையகம் மற்றும் ballistic ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் ஆகியவை குறிவைக்கப்பட்டன.
தற்போதைய போர்ச் சூழலில், ஈரானின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான இராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தரப்பு உரிமை கோரியுள்ளது.
அதேவேளை, ஈரானும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்துவருகின்றது.




