கொழும்பில் பதற்றம்: பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் வைத்து, இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த – பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், 1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த – பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் […]













