இலங்கை செய்தி

கொள்ளுப்பிட்டியில் சர்ச்சைக்குரிய வாகன விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு நீதிமன்றம் தண்டனை

  • June 8, 2023
  • 0 Comments

2019ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சாகர சரச்சந்திரவுக்குப் பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நவிந்து உமேஷ் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. இதன்படி, பிரதிவாதிக்கு 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த உயர்நீதிமன்றம், அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டது. இது தவிர, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மனைவிக்கு 26 இலட்சம் […]

பொழுதுபோக்கு

சாதி வெறியோடு ஆபாசமாக பேசிய நடிகர்… யார்னு பாக்கனுமா?

  • June 8, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ‘சின்னதாய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். இந்த படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து ‘கிழக்குச் சீமையிலே’, ‘உழவன்’, ‘பசும்பொன்’, உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். சமீப காலமாக இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில், சீரியல் பக்கம் சாய்ந்தார். அதே போல் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி, பாஜக கட்சியின் கலை இலக்கிய பொறுப்பாளராகவும் விக்னேஷ், சமீபத்தில் […]

உலகம் செய்தி

உலகின் ஆழமான ஹோட்டல் பூமிக்கடியில் 400 மீட்டர் தொலைவில் திறந்து வைப்பு

  • June 8, 2023
  • 0 Comments

பூமிக்கடியில் 400 மீட்டர் தொலைவில் மக்கள் ஓய்வெடுக்க புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. ‘உலகின் ஆழமான ஹோட்டல்’ என்று அழைக்கப்படும் டீப் ஸ்லீப் ஹோட்டல், ஐக்கிய இராச்சியத்தின் நார்த் வேல்ஸில் உள்ள எரி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் ஸ்னோடோனியா மலைத்தொடர்களின் கீழ் அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலில் 4 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வார இறுதி நாட்களில் மட்டும் இங்கு தங்குவதற்கு திறந்திருக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஐந்து வருடங்களில் 73 ஆயிரம் பேர் வேலையிழப்பு

  • June 8, 2023
  • 0 Comments

கடந்த 05 வருடங்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பணியாற்றிய 73 ஆயிரத்து 440 பேர் வேலை இழந்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த தொழிலாளர் சட்ட அமைப்பை தயாரிப்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் சுருக்கம் ஜூன் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழிலாளர் ஆலோசனை […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் ஸ்வஸ்திகா சின்னத்திற்கு தடை

  • June 8, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் நாஜி கட்சியின் சின்னமான ஸ்வஸ்திகாவை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த அடையாளத்தைப் பயன்படுத்தி தீவிர வலதுசாரிக் குழுக்களின் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த அடையாளத்தைக் காட்டினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்து மதம், பௌத்தம் மற்றும் ஜைன மதத்தின் புனித சின்னமான பண்டைய கொக்கி குறுக்கு வடிவமைப்பு, நாஜி கட்சியின் சின்னமாக பெறப்பட்டது. எனினும் புதிய சட்டத்தினால் […]

இலங்கை செய்தி

சீனா செல்ல முடியாது!!! கொழும்பு விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சீன பிரஜை

  • June 8, 2023
  • 0 Comments

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கை வந்த போது பிடிபட்ட சீன பிரஜை மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவரின் பலத்த பாதுகாப்புடன் இன்று மாலை 5 மணியளவில் சீனப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்த சீன […]

உலகம்

ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்த கனடிய பிதமர்

கனடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கனடாவில் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான தருணத்தில் கனடாவிற்கு உதவியமைக்காக நன்றி பாராட்டுவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துளார். சுமார் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை மாலை வேளை வரையில் 362 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிவதாக காட்டுத் […]

உலகம்

சோமாலியாவில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சோமாலியாவில் அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இலங்கை

இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது என வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை சரிவு மற்றும் டாலரின் மதிப்பு குறைவதே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், வாகன உதிரி பாகங்கள், வாகன பராமரிப்பு (சேவை) கட்டணம், காப்பீட்டு கட்டணம் மற்றும் குத்தகை கட்டணம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது, […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

error: Content is protected !!