எங்களுக்கு ஆணையிட அமெரிக்காவிக்கு உரிமையில்லை – கொந்தளித்த சீனா
ரஷ்யாவுக்கு உதவினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில், எங்களுக்கு ஆணையிட உரிமை இல்லை என சீனா பதிலடி கொடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஊடகத்திடம் பேசிய சி.ஐ.ஏ இயக்குனர் பில் பர்ன்ஸ், உக்ரைனுடனான மோதலில் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியாக உதவும் வகையில், ஆபத்தான உபகரணங்களை வழங்க சீனாவின் தலைமை பரிசீலித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம் என குற்றம்சாட்டியிருந்தார்.ஆனால், அவரது இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்தது. அத்துடன் ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதிக்கான சாத்தியமான சாலை […]













