பங்களாதேஷ் தலைநகரின் ஏழு மாடிக் கட்டடத்தில் வெடிவிபத்து : 14 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷின் தலைநகரில் ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. டாக்காவின் வணிகப் பகுதியான குலிஸ்தானில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்ப இடத்திற்கு வருகைத் தந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 11 தீயணைப்புத்துறை குழுக்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













