இந்தியா செய்தி

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் கர்ப்பம்.. யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம்.! 15 வயது சிறுமியின் துணிகர செயல்

  • April 18, 2023
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோ பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து, பிறந்த குழந்தையை உடனடியாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர், தவறான உறவில் இருந்து பெண் குழந்தையை கருத்தரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.பள்ளி செல்லும் இந்த சிறுமியின் தாய் வீடுகளில் பணிப்பெண்ணாக பணியாற்றி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிறுமிக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவர் […]

ஆசியா செய்தி

ஹாங்காங்கில் தேசத்துரோக சிறுவர் புத்தகங்களை வைத்திருந்த இருவர் கைது

  • April 18, 2023
  • 0 Comments

ஹாங்காங்கில் தேசத்துரோகம் என்று அதிகாரிகள் கூறும் படப் புத்தகங்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பதிப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு புத்தகங்களை வைத்திருந்ததற்காக முதல் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் என்று நம்பப்படுகிறது. அதிகாரிகள் புத்தகங்களை தங்கள் கிராமத்தில் இருந்து ஓநாய்களைத் தடுக்க முயலும் செம்மறியாடுகளைப் பற்றி  ஹாங்காங்கர்கள் மற்றும் சீனாவின் அரசாங்கத்தைக் குறிப்பிடுவதாக விளக்கினர். இந்த கைதுகள் ஹாங்காங்கின் உரிமைகளில் மற்றொரு சீரழிவு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த கைதுகளை […]

இந்தியா செய்தி

இந்தியாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் ; 9 நாட்களில் 40 குழந்தைகள் பலி!

  • April 18, 2023
  • 0 Comments

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் புதுவகையான வைரஸால் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகை முடக்கிப்போட்ட கொரோனா தொற்று சற்று சரியாகி வரும் நிலையில், அடுத்ததாக இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடினோ வைரஸ் எனும் புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த வைரஸ் அதிகமாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவையில் கடந்த 9 நாட்களில் அடினோ வைரஸ் தொற்றால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் […]

ஆசியா செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாதுகாப்பு ஜாமீன் வழங்கிய லாகூர் நீதிமன்றம்

  • April 18, 2023
  • 0 Comments

இந்த வார தொடக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகளில் அவருக்கு லாகூர் உயர் நீதிமன்றம் பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது. லாகூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே கானின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல நாட்கள் பதட்டமான நிலைப்பாட்டிற்குப் பிறகு வளர்ச்சி ஏற்பட்டது, இது ஒரு தனி நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முயன்றதால் மோதல்களாக அதிகரித்தது. ஏராளமான ஆதரவாளர்களுடன், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் மோதல்களுக்குப் […]

இந்தியா செய்தி

வீட்டிற்குள் புகுந்து தாக்கிய 20 குரங்குகள்.. பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி!

  • April 18, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் தெலங்கானாவில் குரங்குகள் கூட்டமாக வந்து தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ராமரெட்டி கிராமத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. இந்த குரங்குகள் அடிக்கடி வீதிகளில் நடமாடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நர்சவ்வா என்ற மூதாட்டி (70) ஒருவரின் வீட்டிற்குள் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் நுழைந்துள்ளன. அங்கு பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த அவரை சரமாரியாக அந்த குரங்குகள் தாக்கியுள்ளன. இதில் அவர் படுகாயமடைந்தார். குரங்குகள் […]

ஆசியா செய்தி

ஈரானில் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் : ஐ.நா நிபுணர்கள் சீற்றம்! Mar 17, 2023 10:50 am

  • April 18, 2023
  • 0 Comments

ஈரானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா நிபுணர்கள் தங்களது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஈரானில் சுமார் 1200 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானில் வசிக்கும் பெண்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் திறன் குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்களை கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனளர். கைதுகள் அறிவிக்கபட்டாலும், பல மாதங்களாக ஈரானிய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த தவறியுள்ளதாகவும், […]

இந்தியா செய்தி

கைலாசாவில் குடியுரிமை பெற பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்; நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 18, 2023
  • 0 Comments

சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது. இதற்கிடையே கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு துஷ்ப்பிரியோக வழக்கில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.அத்தோடு கைலாசாவை சுற்றிப்பார்க்க உலக பக்தர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்ட நிலையில் நித்தியானந்தாவின் நகைச்சுவை பேச்சு காரணமாக அவருக்கு பக்தர்களைவிட அதிகமாக ரசிகர்களும் உருவாகினர். இந்நிலையில் […]

ஆசியா செய்தி

தென் கொரியாவில் திருமணத்தை தவிர்க்கும் இளைஞர்கள்! சரியும் பிறப்பு விகிதம் – திகைக்கும் அரசு

  • April 18, 2023
  • 0 Comments

தென் கொரியாவில் இளைஞர்கள் திருமணம் செய்வதனை தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பிறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது. தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ”2022-இல் சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4% குறைவு. திருமணங்கள் குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில், […]

இந்தியா செய்தி

உலகின் மிக அழகான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா

  • April 18, 2023
  • 0 Comments

உலகில் மிக அழகான மக்களைக் கொண்ட முதல் 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகின் மிக அழகான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டிலை ரெட்டிட் தளம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 1 – 10 வரையான முதல் பத்து இடங்களில் முறையே இந்தியா, அமெரிக்கா, சுவீடன், ஜப்பான், கனடா, பிரேஸில், பிரான்ஸ், இத்தாலி, உக்ரேன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா செய்தி

WIPL – இரண்டாவது வெற்றியை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி

  • April 18, 2023
  • 0 Comments

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 156 ரன்கள் […]

error: Content is protected !!