சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200வது போட்டியாகும். டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இதனால் ரன் வேகம் அதிகரித்தது. 2வது விக்கெட்டுக்கு […]













