14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். […]













