இலங்கை செய்தி

மீண்டும் கொவிட் – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கோரிக்கை

  • May 4, 2023
  • 0 Comments

  கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் கொவிட் 19 தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் குறிப்பாக வெளிப்புற அமைப்புகளில் இருக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். தற்போது நோய் பரவும் […]

செய்தி தமிழ்நாடு

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Inclusion கல்வியை நோக்கிய பயணம்

  • May 4, 2023
  • 0 Comments

சென்னை, இந்தியா – DLearners,NSS மற்றும் YRCS கிளப் ஆஃப் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியுடன் இணைந்து, ஏப்ரல் 29,சனிக்கிழமையன்று Inclusion கல்வியை நோக்கிய ஒரு பயணம் INCLUSION மேளாவை நடத்தியது. கல்வியாளர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, INCLUSION கல்வியின் முக்கியத்துவத்தைக் கொண்டாட ஒன்றிணைந்ததன் மூலம் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழக அரசின் முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திருமதி பூங்கோதை ஆலடி அருணா சிறப்பு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தையிட்டி பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர்!

  • May 4, 2023
  • 0 Comments

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்,  உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள்,  வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு  வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் தீவிபத்து!

  • May 4, 2023
  • 0 Comments

தெற்கு ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின்  கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் அருகே உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தில் குறித்த தீவிபத்து நேர்ந்துள்ளது. ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தின் காரணமாக உயர்சேதம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியை  கிரிமியாவுடன் இணைக்கும் பாலம் அருகே மேற்குப் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு தீப்பிடித்த இரண்டு நாட்களில் […]

இலங்கை செய்தி விளையாட்டு

வழக்கு விசாரணை தாமதம் | அபராதம் கோரும் தனுஷ்க

  • May 4, 2023
  • 0 Comments

  இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் சட்டத்தரணி, நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் சட்டக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வாதத்தை சமர்ப்பித்துள்ளார். வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால் நீதிமன்ற கட்டணத்தை உரிய அதிகாரிகளே செலுத்த வேண்டும் என தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போதே தனுஷ்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர். பிணை கோரிக்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு […]

செய்தி தமிழ்நாடு

ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை

  • May 4, 2023
  • 0 Comments

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் இவர்,அண்மையில், உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 5 வது இளையோர் ஆசிய அளவிலான தடகள போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். சுமார் 40 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில், 3000 மீட்டர் தூரத்தை 8 நிமிடம் 39 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்த யோகேஸ்வர் அனைவரின் […]

இலங்கை

3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது!

  • May 4, 2023
  • 0 Comments

தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்து அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகம் இலாபம் பெற்றுத் தருவதாகக்கூறி 3 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத் தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கோகலை பகுதியில் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதுடன், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் பெற்றுத்தருவதாக உறுதியளித்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து 9 […]

உலகம் செய்தி

24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப் திட்டவட்டம்!

  • May 4, 2023
  • 0 Comments

வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே நாளில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். போரை நான் முடிவுக்கு கொண்டுவருவேன். அது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் உக்ரைன் – ரஷ்யா போரை பேரழிவு என்று விமர்சித்த அவர், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஜோ பைடனின் திறமையற்ற நிர்வாகத்தின் […]

இலங்கை செய்தி

வெசாக் காலத்தை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

  • May 4, 2023
  • 0 Comments

  எதிர்வரும் வெசாக் வாரத்தில் மதம், ஒழுக்கம் மற்றும் கலாசாரத்திற்கு முரணான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவேஇ போயா தினம் உள்ளிட்ட வெசாக் தினங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒலுபக்கன் நடனம் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெசாக் காலத்திற்கு பொருத்தமற்ற பல்வேறு தகாத […]

செய்தி

ருவாண்டாவில் பெய்து வரும் கனமழை, வெள்ளம்; 109 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்க அமைந்துள்ள நாடு ருவாண்டா. இந்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாகாணத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது இந்நிலையில், ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!