இலங்கை

200க்கும் அதிகமான மடிக்கணனிகளுடன் விமானநிலையம் வந்த ரஞ்சன்

  • May 12, 2023
  • 0 Comments

நூற்றுக்கணக்கான மடிக்கணனிகளுடன் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (12) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சிங்கப்பூர், அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள ஆதரவாளர்களால் மொத்தம் 250 மமடிக்கணனிகள் ரஞ்சன் ராமநாயக்கவிடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய மடிக்கணினிகளை ரஞ்சன் ராமநாயக்க இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து ரஞ்சன் ராம்நாயக்க கூறுகையில்,மடிக்கணினிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வரிச்சலுகைகளை வழங்கிய இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். https://web.facebook.com/watch/?v=764942801786263 அத்துடன் நன்கொடைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும் […]

ஐரோப்பா

வீடு ஒன்றிலிருந்து உதவி கோரி வந்த அழைப்பு… விரைந்த உதவிக்குழுவினருக்கு நேர்ந்த கதி!

  • May 12, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் தீயணைப்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். மேற்கு ஜேர்மனியிலுள்ள Ratingen என்னும் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் தீயணைப்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். திறந்திருந்த அந்த வீட்டின் அருகே பொலிஸார் செல்லவும், அந்த வீட்டுக்குள்ளிருந்து ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்துள்ளது. அந்த வெடி விபத்தில், இரண்டு பொலிஸாரும் 10 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர். […]

வட அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

  • May 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தமிழ்நாடு

மண்சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு

  • May 12, 2023
  • 0 Comments

விழுப்புரம்:- திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண் சரிவில் சிக்கி வட மாநில இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதேபோல் இன்று மாலை திண்டிவனம் ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றது. அங்கு மேற்கு வங்காளம், ஜல்பைகுரி அடுத்த சைலிஹத் ரானிசேரா டீ கார்டன் பகுதியை சேர்ந்த சுக்மன் மிஞ் […]

இலங்கை

கம்பளையில் காணாமல் போன இளம் பெண் கொலை

  • May 12, 2023
  • 0 Comments

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆசியா

சீனாவில் ஊழலில் சிக்கிய 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

  • May 12, 2023
  • 0 Comments

சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் மாநில அளவிலான அதிகாரிகள்,  துணை மாநில அதிகாரிகள், இராணுவகமிஷன் உறுப்பினர்கள்,  டஜன்கணக்கான மந்திரிகள் அலுவலக அதிகாரிகள் என […]

செய்தி தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

  • May 12, 2023
  • 0 Comments

காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். காக்கிநாடாவில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய சர்க்கார் எக்ஸ்பிரஸ் அறையிலானது வழக்கம் போல் இன்று அதிகாலை 2.37 AM மணிக்கு புறப்பட்டது. ஆனால் வழக்கம் போல் கும்மிடிப்பூண்டியில் 4.10 AM மணிக்கு வந்து சேர வேண்டிய இந்த விரைவு ரயில் ஆனது 30 நிமிடங்கள் தாமதமாக 4.40 AM மணிக்கு […]

பொழுதுபோக்கு

குடிக்கும் புகைத்தலுக்கும் அடிமையான நயன்தாரா!! நடந்தது என்ன? கொதிக்கும் ரசிகர்கள்

  • May 12, 2023
  • 0 Comments

நடிகை நயன்தாரா குடிக்கும், புகைக்கும் கடுமையாக அடிமையாகியிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் பிரேக் அப் ஆகிவிட்டது. சிம்புவுடன் காதலில் இருந்தபோது குடிக்கு அடிமையாகியிருந்தார் நயன். சிம்புவுடன் பல முறை பப்புகளுக்கு சென்றிருக்கிறார். குடி மடுமின்றி புகை பழக்கத்துக்கும் அடிமையானார். அந்தக் காதலும், பிரபுதேவாவுடனான காதலும் பிரேக் அப் ஆன பிறகு விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் […]

செய்தி தமிழ்நாடு

தண்ணீர் அடி பம்பு சேர்த்து கான்கிரீட் போடப்பட்டது

  • May 12, 2023
  • 0 Comments

த. சிவப்பிரகாசம் கள்ளக்குறிச்சி அருகே சிமெண்ட் சாலையுடன் தண்ணீர் அடி பம்பும் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதி.. !! இதுபோன்று தவறு செய்யும் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.. !! பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வீட்டில் வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கரவாகனத்தோடு சேர்த்து சாலை அமைத்தது குடி நீர் அடிபம்புடன் சேர்த்து சிமெண்ட் சாலை கால்வாய் […]

ஐரோப்பா

மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர்!

  • May 12, 2023
  • 0 Comments

பிரான்சில் மாணவர்களுடைய பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் விக்டர் (29). அவர், தன் வகுப்பில் பயிலும் 63 மாணவர்களுடைய ஆங்கில விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.பிரான்சின் கல்வி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விக்டர் இவ்வாறு செய்துள்ளார். விக்டர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட உள்ள நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 160,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் அரசு சட்டத்தரணி அலுவலகமும், பள்ளிக்கல்வித்துறையும் […]

error: Content is protected !!