செய்தி தமிழ்நாடு

130 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

  • May 13, 2023
  • 0 Comments

கர்நாடகா மாநிலத் தேர்தல்: 130 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை மதுரையில் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர். கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகி வருகின்றனர். இதில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பாஜக 66 இடத்திலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலை வைக்கின்றன. இதனை காங்கிரஸ் கட்சியினர் […]

ஐரோப்பா

நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல்!

  • May 13, 2023
  • 0 Comments

இங்கிலாந்து வழங்கிய புயல் நிழல் நீண்ட தூர கப்பல் ஏவுகணைகள் Storm Shadow long-range cruise missiles ஆக்கிரமிக்கப்பட்ட லுஹான்ஸ்கில் உள்ள இரண்டு தொழில்துறை தளங்கள் நோக்கி ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. “இந்த ஆயுதங்கள் பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என்று லண்டனின் அறிக்கைகளுக்கு மாறாக”இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. ஏவுகணைகளை செலுத்திய இரண்டு உக்ரைன் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது. கியிவ்க்கு நீண்ட தூர வெடிமருந்துகளை வழங்கிய […]

செய்தி தமிழ்நாடு

பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

  • May 13, 2023
  • 0 Comments

கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளனர் . சிலிண்டர் விலை உயர்வு, ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவரையும் ஒடுக்கும் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் நாள்தோறும் கடந்த 9ஆண்டுகளில் சந்தித்து வந்திருந்தனர். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு மதப் பிரச்சினைகளைத் தூண்டி […]

இலங்கை

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி முன்னெடுப்பு!

  • May 13, 2023
  • 0 Comments

தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து ‘அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான மதிய அன்னதானமும் இடம்பெற்றது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.  

பொழுதுபோக்கு

“தளபதி 68” குறித்து மகிழ்ச்சியான செய்தி!! 19 வயது கதாநாயகியுடன் விஜய்??

  • May 13, 2023
  • 0 Comments

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 19 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில், ‘தளபதி 68’ என்று தளபதியின் அடுத்த படம் தொடர்பான செய்தி ஏற்கனவே இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளது. தளபதி 68 புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது திரைப்படம் என்றும், இந்த திட்டத்தை டோலிவுட் ஹிட்மேக்கர் கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த படம் இருமொழி […]

இலங்கை

முல்லைத்தீவில் 10 வயதுச் சிறுமியை கடத்த முயற்சி; 23 வயது இளைஞன் கைது

  • May 13, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது […]

இலங்கை

வருமானம் மீதான வரியைக் குறைப்பதில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்!

  • May 13, 2023
  • 0 Comments

இலங்கையில் வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும்  எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் காதலி எடுத்த முடிவு… காதலன் செய்த கொடூர செயல்!

  • May 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்துகொள்ள இன்னொரு மாகாணத்திற்கு சென்ற காதலியை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரை கைது செய்துள்ள டல்லாஸ் பொலிஸார், கொலை வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர். டெக்சாஸ் மாகண நிர்வாகம் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து கருவுற்று ஆறு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்துகொள்ள தடை விதித்திருந்தது. ஆனால் மருத்துவ அவசரம் கருதி கருக்கலைப்பு விவகாரத்தில் விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 26 வயதான கேப்ரியல்லா கோன்சலஸ் தமது […]

பொழுதுபோக்கு

27 வருடங்கள் கடந்த போதிலும் இன்றும் மறக்காத ‘இந்தியன்’! இவற்றை கவனித்தீர்களா?

  • May 13, 2023
  • 0 Comments

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ திரைப்படம் 1996 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கு எடுத்துக்காட்டாக இப்படம் விளங்குகிறது. ஷங்கர் இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.திரைப்படத்தின் கதை அரசு அதிகாரிகளின் ஊழலுக்கு எதிராக நிற்கும் ஒரு சுதந்திர போராட்ட வீரரை மையமாகக் கொண்டது. இன்றும் படம் இறக்காத நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் நடந்து வருகிறது. கோலிவுட்டில் ஒரு வலுவான படமாக நிற்கும் ‘இந்தியன்’ படத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். […]

இலங்கை

மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு!

  • May 13, 2023
  • 0 Comments

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!