ராசிபலன்

கன்னி ராசி நேயர்களே கனவு கன்னி கிடைப்பார்கள்

  • May 30, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். அஸ்வினி : பிரச்சனைகள் குறையும். பரணி : […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

  • May 30, 2023
  • 0 Comments

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் திரைப்பகிர்வு (Screen Sharing) வசதியை விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கொண்டுவர இருக்கிறது. Whatsapp எப்போதும் அதிக அம்சங்கள் நிறைந்த செயலியாக வைத்திருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் எளிமையாக உபயோகப்படுத்துதல் இவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது Whatsappஇல் புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி மெட்டா நிறுவனம் அதன் தளமான Whatsappஇல், புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. WABetaInfo […]

வாழ்வியல்

தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் ஆபத்து!

  • May 30, 2023
  • 0 Comments

ஒருவர் தண்ணீர் குடிக்காமல் இருப்பது உண்மையில் தடுப்பாற்றலைப் பாதிக்கும் என தெரியவந்துள்ளது. உடலின் தடுப்பாற்றல் செயல்முறையின் ஓர் அங்கமான lymphatic கட்டமைப்பு உடலிலுள்ள திரவங்களில் சமநிலைகாண உதவும். அந்தக் கட்டமைப்பு உடலின் வெள்ளை ரத்த அணுக்களின் போக்குவரத்துக்கும் தளமாகச் செயல்படுகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தடுப்பாற்றல் செயல்முறையில் முக்கியப் பங்காற்றுகின்றன. lymphatic கட்டமைப்பு இயங்காதபோது நோய்த்தொற்றைத் தடுக்கவேண்டிய இடங்களுக்கு அணுக்களால் செல்லமுடியாது. அது தடுப்பாற்றலைப் பாதிக்கக்கூடியது. அந்தக் கண்ணோட்டத்தின்படிப் போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது தடுப்பாற்றலைப் பாதிக்கலாம். […]

இலங்கை

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

  • May 30, 2023
  • 0 Comments

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முடிவு செய்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் விசேட கொள்கை அடிப்படையிலான கடனாக வழங்க தீர்மானித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி இன்று அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஊடாக வழங்கப்படும் விரிவான நிதி உதவிப் பொதியின் ஒரு பகுதியே இந்த கடன் வசதி என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண்களை பாதுகாக்க தீவிர முயற்சி

  • May 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண்களுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இவ்வருடத்தின் கோடை காலம் முழுவதும் இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்கள் நேரத்தை செலவிடும் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். அதுபோன்ற சம்பவங்களின் போது சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் […]

இலங்கை

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவருக்கு நேர்ந்த கதி

  • May 30, 2023
  • 0 Comments

பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக தங்கியிருந்த வேளை 74 வயதான குறித்த யாத்திரிகர் உயிரிழந்துள்ளதாக யாத்திரை மேற்கொள்ளும் ஏனைய யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.கைதடி பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம […]

இலங்கை

இலங்கை விமான நிலையங்களில் அரசியல்வாதிகளின் சலுகைகள் நீக்குமாறு கோரிக்கை

  • May 30, 2023
  • 0 Comments

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இது களவு மற்றும் மோசடிக்கு சமமானதாகும். அலி சப்ரி ரஹீமின்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையம் […]

ஐரோப்பா

ஜெர்மனி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • May 30, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது. இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை […]

ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி

  • May 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் centre régional opérationnel de surveillance et de sauvetage (Cross) மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டனர். படகுகளில் ஒன்று அதன் இயந்திரத்தை […]

இலங்கை

இலங்கையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

  • May 30, 2023
  • 0 Comments

இலங்கையில் விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தரப்பினர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு […]

error: Content is protected !!