ஐரோப்பா

Tesco Clubcard வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

  • May 31, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் டெஸ்கோ கிளப்கார்டின் £15 மில்லியன் பெறுமதியான வவுச்சர்கள் இன்றுடன் காலாவதியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்கள் மே 2021 இல் வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் காலாவதியாகுகிறது. ஆகவே  ஸ்டோர், ஆன்லைன் அல்லது கிளப்கார்ட் ரிவார்ட் பார்ட்னர்களுடன் நள்ளிரவுக்கு முன் வவுச்சர்களை மீட்டெடுக்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டுள்ள கடைக்காரர்கள் டெஸ்கோவில் பணம் செலவழிக்கும்போதோ அல்லது பல்பொருள் அங்காடியின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வாங்கும்போதோ புள்ளிகளைச் சேகரிக்கின்றனர். ஒரு வவுச்சரைப் பெற குறைந்தபட்சம் 150 […]

வட அமெரிக்கா

மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள டொனால்ட் டிரம்ப்

  • May 31, 2023
  • 0 Comments

ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன் என மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார் அமெரிக்காவின் முன்னாள் டொனால்ட் டிரம்ப் . 125வருடங்களிற்கு முன்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில்,நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அன்றைய தினமே ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைப்பதை தடுப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடுவேன் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். குடியேற்றவாசிகளிற்கு எதிரான […]

ஐரோப்பா

ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் விபத்து!

  • May 31, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘ட்ரோன்’ ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தினால்  எந்த உள்கட்டமைப்பும் சேதமடையவில்லை என்று Krasnodar பிரதேசத்தின் செயல்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 15 மைல் தொலைவில் உள்ள அஃபிப்ஸ்கி சுத்திகரிப்பு ஆலையை ஆளில்லா விமானம் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. .

ஐரோப்பா

சுவிஸில் மார்பில் குத்தப்பட்ட கத்தியுடன் நடந்து வந்த இளம்பெண்..

  • May 31, 2023
  • 0 Comments

தன் கணவனால் கத்தியால் குத்தப்பட்ட ஒரு இளம்பெண், கையில் குழந்தையுடனும், மார்பில் கத்தியுடனும் நடந்துவந்த சம்பவம் ஒன்று சுவிஸ் மாகாணம் ஒன்றில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. நேற்று, ஜெனீவாவிலுள்ள Petit-Lancy என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தனது 30 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடனும், மார்பில் குத்தப்பட்ட கத்தியுடனும் நடந்து வருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என […]

இலங்கை

துருக்கி மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவை!

  • May 31, 2023
  • 0 Comments

கொழும்பு மற்றும் துருக்கிய நகரமான இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொழும்பு மற்றும் இஸ்தான்புல் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் Demet Sekercioglu மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில்  விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. […]

பொழுதுபோக்கு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கே டாப் கொடுக்கும் ராஜலட்சுமி செந்தில்? அட்டகாசமான டிரெய்லர்

  • May 31, 2023
  • 0 Comments

நாட்டுப்புற பாடகர் ஜோடியான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஆகியோர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று அடுத்த கட்டத்திற்கு சென்றனர். எட்டாவது சீசன் வெற்றியாளராக முடிசூட்டப்பட்ட செந்தில் கணேஷ் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்துள்ளார், அதில் ராஜலட்சுமியும் கேமியோ ரோலில் தோன்றியுள்ளார். இப்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘லைசென்ஸ்’ படத்தின் ராஜலக்ஷ்மி மிக முக்கிய கதாப்பாத்திரத்தில், மெயின் ஹீரோயின் என்றே சொல்லாம். அப்படிப்பட்ட ரோலில் நடிக்கின்றார். சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களைப் பாதுகாக்க துப்பாக்கிகளைப் […]

இலங்கை

இலங்கைக்கு வரும் காலம் கடினமாக இருக்கும் என எச்சரிக்கை!

  • May 31, 2023
  • 0 Comments

இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்சியினால் அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் வரும் காலங்களில் கடினமான காலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது தற்போது ரூபாயின் பெறுமதியில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரசாங்கம், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது, கடனை திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளே கடினமான காலத்தை கொண்டுவரும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “இறக்குமதிகள் கட்டுப்பாடுகள் தளர்வு மற்றும் தேவை அதிகரித்தவுடன், ரூபாயின் மதிப்பு மீண்டும் […]

இலங்கை

மீண்டும் வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி!

  • May 31, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும் டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். இன்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளதாக நிதியமைச்சு […]

இலங்கை

நிர்மாணத்துறை பொருட்களுக்கான விலை குறைவடையும் வாய்ப்பு!

  • May 31, 2023
  • 0 Comments

உலக சந்தையில் சீமெந்து,  இரும்பு,  அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு […]

இந்தியா

மல்யுத்த வீரர்களுக்கு எதிரான வன்முறை- உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

  • May 31, 2023
  • 0 Comments

இந்தியாவில் மல்யுத்த வீராங்கனைகள் மீதான துஷ்பிரயோகத்திற்கு, எதிரான போராட்டத்திற்கு உலக மல்யுத்த அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக அமைச்சருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். அப்போது பொலிஸார் அவர்களை […]

error: Content is protected !!