இலங்கை

யாழில் இருந்து வாரத்தில் ஏழு நாட்களும் சேவைகளை ஆரம்பிக்க கலந்துரையாடல்!

  • June 3, 2023
  • 0 Comments

யாழ். விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள்,  கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும்  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா […]

பொழுதுபோக்கு

உங்களுக்கு தெரியுமா? பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் யேசுதாஸ்… மன வேதனையுடன் கூறிய செய்தி

  • June 3, 2023
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தந்தையை பின்பற்றி பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்தார். இன்னும் ஒரு சில படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடித்திருந்ததாகவும் சில காரணங்களால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒரு பேட்டியில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஜேசுதாஸ். இதுகுறித்து […]

பொழுதுபோக்கு

ஆர்யாவின் வசூலை மிஞ்சிய ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்!

  • June 3, 2023
  • 0 Comments

நேற்று நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படமும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘வீரன்’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த இரு படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தை, ‘விருமன்’ பட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக, சித்தி இட்னானி அழகை தாண்டி சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் […]

இந்தியா இலங்கை

விமானத்தில் இருந்து தவறி விழுந்து நபருக்கு நேர்ந்த கதி!

  • June 3, 2023
  • 0 Comments

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ் விபத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜோ ர்ஜ் (65) என்ற பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி : 11 ரயில் சேவைகள் இரத்து!

  • June 3, 2023
  • 0 Comments

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக சென்னை –  கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண். 12666). இன்று காலை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (எண். 12842), பெங்களூருவில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக கவுகாத்தி செல்லும் ரயில்,  ஹவுராவில் இருந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இரண்டு வாரத்தில் மட்டும் 27 இளம் வயதுப் பிள்ளைகள் மாயம்..!

  • June 3, 2023
  • 0 Comments

அமெரிக்க நகரமொன்றில், இரண்டு வாரங்களில் 27 பிள்ளைகள் வரை மாயமாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அமெரிக்க மாகாணமான Ohioவிலுள்ள Cleveland நகரில், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும், 12 வயது முதல் 17 வயதுவரையுள்ள சுமார் 30 பிள்ளைகள் வரை காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். பிள்ளைகள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. ஒருவேளை, இது கடத்தல் கும்பல் ஒன்றின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காணாமல் போன பிள்ளைகள், […]

இந்தியா பொழுதுபோக்கு

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று : ரயில் விபத்து குறித்து கமல்ஹாசன் டுவிட்!

  • June 3, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே விபத்துக்குள்ளான ரயிலில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும்,  ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும்,  அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள […]

இலங்கை

தையிட்டியில் விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம்!

  • June 3, 2023
  • 0 Comments

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும் குறித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  செல்வராசா கஜேந்திரன்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,  ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து […]

ஐரோப்பா

கழிவறைக்குச் செல்வதாகக் கூறிசென்ற இளம்பெண் மாயம்!

  • June 3, 2023
  • 0 Comments

பிரான்சில் இளம்பெண் ஒருவரது கார் பிரேக் டவுன் ஆன நிலையில், போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். ஆனால், அவரது கண்கணிப்பிலேயே அந்தப் பெண் மாயமாகியுள்ளார். Mélanie (35) என்னும் இளம்பெண், செவ்வாயன்று பிரான்சிலுள்ள Dordogne என்ற இடத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மதியம் ஒரு மணியளவில் அவரது காரில் பழுது ஏற்பட்டுள்ளது.உடனே, போக்குவரத்து பொலிஸார் ஒருவர் அவரது உதவிக்கு வந்துள்ளார். தான் கழிவறைக்குச் செல்லவேண்டும் என Mélanie கூற, அந்த பொலிஸார் அவரை தனது வாகனத்தில் […]

இலங்கை

வடக்கில் பௌத்த மயமாக்கல் – இந்தியா உதவாது என மனோ கணேசன் தெரிவிப்பு!

  • June 3, 2023
  • 0 Comments

தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது நாட்டில் தோன்றிய பௌத்தத்தை மற்ற இடங்களிலும் வளர வேண்டும் என்றே இந்தியா விரும்பும் என்பதனால் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கோருவதற்கு பதிலாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு […]

error: Content is protected !!