தமிழ் MPக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த மே மாதம் நடந்த பேச்சுக்களில் எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் இடம்பெறாத நிலையில் இன்றைய பேச்சுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இரு நாட்கள் பேச்சு நடந்தது. முதல் நாளில் காணி விடுவிப்பு, தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, அரசியல் […]













