இந்தியா

ஒடிசா புகையிரத விபத்து! திடீரென வந்த துர்நாற்றம்: அச்சத்தில் மக்கள்

ஒடிசாவில் புகையிரத விபத்து நடைபெற்ற இடத்தில் கிடந்த ஒரு பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் சில சடலங்கள் உள்ளே கிடக்கலாம் எனவும் உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், இந்த தகவலை ரயில்வே மறுத்துள்ளது. அதோடு துர்நாற்றம் வீசியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக விபத்தில் உயிரிழந்து சில உடல்கள் மீட்கப்படாமல் இன்னும் அங்கே கிடப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இது அப்பகுதி முழுவதும் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது. . இதைத்தொடர்ந்து புகையிரத அதிகாரிகள், மாநில அரசு […]

பொழுதுபோக்கு

மீண்டும் அப்பாவாகினார் பிரபுதேவா!!

  • June 10, 2023
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் புகழப்படும் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களும், பிரபலங்களும் அடிமை. அவரது நடனத்தை பார்த்து பலரும் இன்றுவரை பிரமிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குநராக இருந்த சுந்தரம் மாஸ்டரின் இரண்டாவது மகன் பிரபுதேவா. பிரபுதேவாவின் அட்டகாசமான கோரியோகிராஃபி: பிரபுதேவா நடன அமைப்பாளராக பணியாற்றும்போது அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர். ஏன் நடனத்தில் கிண்டலடிக்கப்பட்ட […]

இலங்கை

180,000 மில்லியன் ரூபா கருவூல உண்டியல்கள் ஏலம்!

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏலத்தின் மூலம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மி;ல்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி […]

Madonna B Sebastian instagram செய்தி புகைப்பட தொகுப்பு

லியோவில் விஜய் உடன் இணைந்ததாகக் கூறப்படும் மடோனா செபாஸ்டியன்-புகைப்படங்கள்

  • June 10, 2023
  • 0 Comments

Credit/Insta/Madonna B Sebastian லியோவில் விஜய் உடன் இணைந்ததாகக் கூறப்படும் மடோனா செபாஸ்டியன். ரொம்ப சுப்பராத்தான் இருக்காங்க மடோனா செபாஸ்டியன்

உலகம்

பிரித்தானியாவில் வரலாற்றில் முதல் முறையாக தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமனம்

பிரித்தானியாவின் 750 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பிரபு தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நீதித்துறையை வழிநடத்தும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான் டேம் சூ கார் (58 வயது) மற்றும் டேம் விக்டோரியா ஷார்ப் (67 வயது) ஆகியோர் இந்த பதவிக்கான இரண்டு இறுதிப் போட்டியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். பிரபு தலைமை நீதிபதி என்பது தற்போது ஆண்களுக்கு மட்டுமேயான தலைப்பு என்பதால், “பெண் தலைமை நீதிபதி” என்ற தலைப்புக்கு இடமளிக்கும் […]

உலகம்

அமேசான் காட்டில் தொலைந்த குழந்தைகள் 40 நாட்களின் பின்னர் மீட்பு

கொலம்பியாவின் அமேசான் காடுகளில் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 நாட்களுக்குப் பிறகு 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மே 1 ஆம் திகதி, 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு சிறிய ரக விமானம் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டு அமேசான் காட்டில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் பயணித்த சிறுவர்களின் தாய், விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் […]

இலங்கை

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளிநாடொன்றில் பயன்படுத்த முடியும்! அது எந்த நாடு தெரியுமா?

பிரித்தானியாவில் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் உரிய அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்த நாட்டில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி […]

இந்தியா

ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

  • June 10, 2023
  • 0 Comments

ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் குல்பி விற்று வந்தார். அப்போது, குல்பி வாங்கி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில், 15 குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று மருத்துவமனை சிகிச்சை முடிந்து 15 […]

உலகம்

டோக்கியோவில் இரு விமானங்கள் மோதி விபத்து!

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சில விமான சேவைகள் தாமதமடைந்துள்ன. இதன்காரணமாக அந்த விமான நிலையத்தில் உள்ள நான்கு ஓடு பாதைகளில் ஒரு ஓடுபாதையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், விமானம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாவும், அந்த விமானத்தின் சில பகுதிகள் விமான ஓடுபாதையில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், மேலதிக தவல்களை ஜப்பானின் போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மத்திய கிழக்கு

ஹோட்டலுக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள்…!

  • June 10, 2023
  • 0 Comments

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகளால் பலர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சுமார் 12 மணி நேரம் நீண்டுள்ளது தீவிரவாதிகளின் கதிகலங்க வைக்கும் முற்றுகை. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் பொலிஸாரால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேர்கள் அந்த ஹொட்டலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், 7 பேர் கொண்ட பயங்கரவாதிகள் […]

error: Content is protected !!