இலங்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு கண்ணீர் மல்க கோரிக்கை!

  • June 12, 2023
  • 0 Comments

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அவரது தாயார் பிரதமர் நரேந்திர மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது. முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து சிறையில் இருந்த நளினி,  முருகன்,  சாந்தன்,  ஜெயகுமார்,  ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் […]

இந்தியா

கேரளாவில் தெருநாய் கடித்ததால் பலியான 11 வயது சிறுவன்

  • June 12, 2023
  • 0 Comments

கேரளாவில் தெருநாய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, கண்ணூர் முழப்பிலங்காட்லைச் சேர்ந்தவர் நௌஷாத். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் நிஹால் (11). இவர் மாற்றுதிறனாளி. இந்நிலையில், நேற்று மாலை வீட்டு வாசலில் நிஹால் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வெகுநேரம் ஆகியும் நிஹால் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். ஆனால், நிஹால் வீட்டு வாசலில் இல்லை. இதனையடுத்து, நிஹாலை உறவினர்கள் தேட ஆரம்பித்தனர்.இரவு 8.30 மணிக்கு வீட்டிலிருந்து […]

இலங்கை

கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 19ம் திகதி திருவிழா ஆரம்பமாகி ஜூலை 3ம் திகதி மகா உற்சவம் நடைபெற்று, மறுநாள் மாணிக்க கங்கையில் நீர் வெட்டப்பட்ட பின்னர் நிறைவடையும். இதேவேளை, திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை தங்க வைப்பதற்காக மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை […]

ஐரோப்பா

குப்பை எடுக்கும் பெண்ணை அகற்ற கோரிய பெண்… பதிலடி கொடுத்த புகைப்படவடிவமைப்பாளர்

  • June 12, 2023
  • 0 Comments

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் என்ற பிரபலமான புகைப்பட வடிவமைப்பாளர், மக்களின் புகைப்படங்களில் சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான திருத்தங்களைச் செய்வதில் பெயர் பெற்றவர்.ஜேம்ஸ் ஃப்ரிட்மேனின் புகைப்பட வடிவமைப்பு சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் , தானாக முன்வந்து தங்கள் புகைப்படங்களை வடிவமைத்து தருமாறு அனுப்புகிறார்கள். இந்நிலையில் , ஒரு பெண் ஸ்பெயினின் வலென்சியாவில் வரலாற்று நினைவுச்சின்னத்தின் முன் எடுத்த புகைப்படத்தை அனுப்பி தனக்குப் பின்னால் குப்பைகளை எடுப்பவரை அகற்றுமாறு ஃப்ரிட்மேனிடம் கேட்டார். குப்பைகளை எடுப்பவரை அகற்றுமாறு கேட்ட பெண்னுக்கு […]

ஐரோப்பா

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்து நாமல் ராஜபக்ஷ விமர்சனம்!

  • June 12, 2023
  • 0 Comments

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் கவலைக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கை பற்றி கருத்து கூறிய அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,   நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும். அதேவேளை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் […]

ஐரோப்பா

விளாடிமிர் புட்டினுடன் கைக்கோர்க்கும் வடகொரிய தலைவர் : மேற்குலக நாடுகளுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்!

  • June 12, 2023
  • 0 Comments

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு “முழு ஆதரவையும் தெரிவித்துள்ளா். அத்துடன் ரஷ்யாவுடன் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்  அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “நீதி நிச்சயம் வெல்லும், ரஷ்ய மக்கள் வெற்றியின் வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்” என கிம் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “சக்திவாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்திற்கு இணங்க, ரஷ்ய அதிபருடன் உறுதியாகக் கைகோர்க்க […]

இந்தியா வட அமெரிக்கா

நாடு கடத்தப்படவுள்ள மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் வெளியான தகவல்

  • June 12, 2023
  • 0 Comments

கனடாவிலிருந்து 700 இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில், சில மாணவர்களின் நாடுகடத்துதலுக்கு கனடா அதிகாரிகள் இடைக்காலத்தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, […]

ஐரோப்பா

ககோவ்கா அணை உடைப்பு : விசாரணைகளை ஆரம்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

  • June 12, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைப்பு குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது இரவு உரையில், இந்த தகவலை வெளிப்படுத்தினார். “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் சமீபத்திய நாட்களில் Kherson பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்,” என்று ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பொது வழக்கறிஞர் அலுவலகம் இந்த பேரழிவு பற்றிய விசாரணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தொடர்புடைய கோரிக்கையை அனுப்பியது என்றும் இதற்கான  பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடழ்டுள்ளார். ” சுமார் […]

ஐரோப்பா

எகிப்து டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிரித்தானியர்கள் பலி!

  • June 12, 2023
  • 0 Comments

எகிப்து டைவிங் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரிட்டிஷ் பயணிகள் மூவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் தீப்பிடித்த டைவிங் படகில் இருந்த காணாமல் போயிருந்த மூன்று பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Scuba Travel இன் செய்தித் தொடர்பாளர் “டூர் ஆபரேட்டராக, எங்கள் மிகவும் மதிப்புமிக்க மூன்று  பயணிகள் தீவிபத்தில் உயிரிழந்ததை கனத்த இதயத்துடன்,  தெரிவிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த சோகமான நேரத்தில் எங்கள் உண்மையான மற்றும் இதயப்பூர்வமான இரங்கல்கள் அவர்களின் […]

இலங்கை

பழைய உணவை கொடுத்து பகிடிவதை; 11 மாணவர்கள் இடைநிறுத்தம்

  • June 12, 2023
  • 0 Comments

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், பழுதடைந்த சோற்றை கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் புதிய மாணவர்களை கடந்த 5ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று பழுதடைந்த சோற்றை ஊட்டச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகிடிவதைக்கு உள்ளாக்கிய மாணவர்களுக்கான வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு , முறையான விசாரணை […]

error: Content is protected !!