இந்தியா, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகள் மிரட்டல் விடுத்தனர் – ட்விட்டர் இணை நிறுவனர் டோர்சி
இந்தியா, நைஜீரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ட்விட்டர் கணக்குகளை கட்டுப்படுத்தும் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை எனில் ட்விட்டரை மூடுவதாக மிரட்டல் விடுத்ததாக இணை நிறுவனர் ஜாக் டோர்சி குற்றம் சாட்டியுள்ளார். 2021 இல் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய டோர்சி, விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகளை அகற்றவும் மற்றும் கணக்குகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால், பணிநிறுத்தம் மற்றும் ஊழியர்கள் மீது சோதனை நடத்தப்படும் என்று இந்தியா மிரட்டியது. […]













