இந்தியா

திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை

தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உளுந்தார்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சுந்தரேசன் என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரேசன் சொந்த ஊருக்கு வந்த பின்னர் தந்தையிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சுந்தரேசன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

பொழுதுபோக்கு

சகுனியாக நடிக்க வேண்டியவர் ராமனாக நடிப்பதா? : சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்!

  • June 15, 2023
  • 0 Comments

கங்கனா ரனாவத் மிகவும் துணிச்சலான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். இதற்கு இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமல்ல  பாலிவுட்டில் உள்ள பிரபலங்களின் மீது வெளிப்படையாகவே பல குற்றச்சாட்டுகளை அடுக்கி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இப்போது பிரபல பாலிவுட் நடிகரை மறைமுகமாக கடுமையாக சாடி உள்ளார். காந்தியவாதி போல் பேசும் கங்கனா ரன்வீர் சிங்கை வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக ஆலியா […]

இலங்கை

இலங்கையில் முதலிடத்தைப் பிடித்தது பேராதனைப் பல்கலைக்கழகம்

Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன் மூலம் உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் பல்வேறு பணிகள் மற்றும் வெற்றிகளைப் பற்றிய சரியான புரிதலை வழங்குகிறது. இது பல்கலைக்கழக நடவடிக்கைகளின் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. அந்த மூன்று பகுதிகள் ஆராய்ச்சி, செல்வாக்கு மற்றும் கற்பித்தல் ஆகியவையாகும் . அந்த மூன்று […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் “கவர்ச்சிக்கு ஓகே” சொல்லி சம்பளத்தை ஏத்திவிட்ட நடிகைகள்..!!!

  • June 15, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள சில நடிகைகள், கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளமாக நடிக்க தயாராக உள்ளனர். ஆனால் சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருகிறார்கள். அப்படி அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ் பற்றியதே இந்த தொகுப்பு . திரையுலகை பொறுத்தவரை ஹீரோக்கள் 50 கோடி, 100 கோடி என சம்பளம் வாங்கினாலும் ஹீரோயின்களுக்கு அதிக பட்சமாக 5 கோடி கொடுப்பதே பெரிய விஷயம். அதிலும் 3 கோடியை தாண்டி நடிகைகள் சம்பளம் வாங்கினால் அது […]

ஐரோப்பா

கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கிய படகு : 500 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்!

  • June 15, 2023
  • 0 Comments

கிரீஸ் கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான குழந்தைகளும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படகு மூழ்கியபோது எத்தனை பேர் அதில் பயணித்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில்  எழுமாறாக சுமார் 750 பணிகள் பயணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில்  […]

விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படவுள்ளன. இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்ய போர் : கண்ணிவெடிகளால் 20 குழந்தைகள் பலி!

  • June 15, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போரில் கண்ணிவெடிகளில் சிக்கி 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 69 பேர் காயமடைந்துள்ளதாகவும்   யுனிசெப் அறிவித்துள்ளது. UNICEF இன் மூத்த அவசரகால ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா பென் மெசாவுட், கோடை மாதங்களில் குழந்தைகள் மேற்பார்வையின்றி அதிக நேரம் வெளியில் செலவிடுவதால் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து கவலை தெரிவித்தார். உக்ரைனின் தோராயமாக மூன்றில் ஒரு பகுதி சுரங்கங்களால் மூடப்பட்டிருக்கிறது, இது ஆபத்துக்களை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை

60 மருந்துகளின் விலைகள் குறைப்பு : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • June 15, 2023
  • 0 Comments

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ள வர்த்தமானியின் பிரகாரம் 60 மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கை

ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற 5 இலங்கை பொலிஸார் மாயம்!

  • June 15, 2023
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் உள்ளிட்ட 6 பேர் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவு!

  • June 15, 2023
  • 0 Comments

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,  அதற்கமைய  தமது பரிந்துரைகள் ஜூலை முதல் வாரத்தில் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்புக்குள் எம்.வி.எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தின் காரணமாக இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் […]

error: Content is protected !!