ஐரோப்பா

ஐரோப்பாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • June 21, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஆண்டு கோடைக்காலத்தின்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை கூடியது. கண்டங்களிலேயே ஐரோப்பா கண்டம் விரைவாகச் சூடுபிடிக்கக் கூடியது என்று செய்தி அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. இவ்வாண்டு முழுதும் அங்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வறட்சி மோசமாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியமும் உலக வானிலை அமைப்பும் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு சுமார் 16,000 பேர் கடும் வெப்பத்திற்குப் […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் புதிய ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • June 21, 2023
  • 0 Comments

இலங்கையில் எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மருத்துவ சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா கொரியா, மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருகின்றது. இந்த நோய் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதைய மழையுடன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய அம்சத்தை அறிமுகம் செய்த WhatsApp – பயனாளர்கள் மகிழ்ச்சி

  • June 21, 2023
  • 0 Comments

WhatsApp புதிய அம்சத்தை அறிமுகம் செய்து பயனளார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தானாகவே சைலன்ஸ ஆகிவிடும் புதிய அம்சம் WhatsAppஇல் அறிமுகம். உலகில் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான WhatsApp, தனது பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அதேபோல் தற்போது மெட்டா நிறுவனம் தனது செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் இனி […]

வாழ்வியல்

தாமதமாக தூங்குபவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து – 37 வருட ஆய்வு முடிவுகள் வெளியானது

  • June 21, 2023
  • 0 Comments

தாமதமாக தூங்குபவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 37 வரும ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நம்மில் பலரும் இரவு நேரங்களில் தாமதமாக தூங்குவதுண்டு. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது இரவு நேரங்களில் வேலைகள் பார்ப்பது போன்றவற்றினால் வெகு நேரம் முழித்திருக்கக் வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் நாம் காலையில் தாமதமாகவும் எழுந்திருக்கிறோம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரவில் தாமதமாக தூங்குவது பல்வேறு நோய்ககளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. […]

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் அபராத தொகை! சாரதிகளுக்கு முக்கிய தகவல்

  • June 21, 2023
  • 0 Comments

இலங்கையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் நலம் மற்றும் மன நிலையை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. அதனை பாா்வையிடுவதற்காக வந்த போதே […]

ஐரோப்பா

அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் எடுத்துள்ள நடவடிக்கை

  • June 21, 2023
  • 0 Comments

துனிசியாவுக்கு பிரான்ஸ் தரப்பில் கிட்டத்தட்ட 26 மில்லியன் யூரோக்கள் பணம் வழங்கப்பட்டுள்ளது. அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக ஆபிரிக்காவில் இருந்து துனிசியாவுக்கு அகதிகள் படையெடுத்து வருகின்றனர். பின்னர் அங்கிருந்து பிரான்ஸிற்குள் நுழைகின்றனர். இதனால் பிரான்ஸ்-துனிசியா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். 25.8 மில்லியன் யூரோக்கள் பணம் வழங்கப்பட்டதாகவும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த துனிசியாவுக்கு இந்த தொகை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழ்பவர்களுக்கு வெளியான தகவல்

  • June 21, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் ஜொப் சென்டர் உதவிகளை வழங்க இருக்கின்றது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் தங்களது வாழ்கை செலவுகளை ஈடு செய்கின்றவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகவே காணப்படுகின்றது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழ்ந்து கொண்டு கரியர்பொன் என்று சொல்லப்படுகின்ற விடுமுறையை களிக்கின்ற வீடுகளில் வசிக்கின்ற ஓர் குடும்பத்தினருக்கு ஜொப் சென்டர் ஆனது அதற்குரிய வாடகை பணத்தை வழங்க வேண்டும் என்று லண்டன் சோஸிஸியால் கிரிப் பிரைப்போர் தனது உத்தரவை தெரிவித்து இருக்கின்றது. அதாவது ஓர் குடும்பமானது சமூக […]

ஆசியா

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியரின் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்

  • June 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் குழந்தைகளை நோக்கி விளையாட்டுக்காக பட்டாசை வீசிய கட்டுமான துறையை சேர்ந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அதனை கண்ட ஊழியர் விளையாட்டுக்காக அவர்களை நோக்கி பட்டாசுகளை வீசினார். உடனே அந்த பட்டாசு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் குழந்தைகள் பயத்தில் தெறித்து ஓடியுள்ளது. இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயதான ராம்தான் புஜான் என்ற அந்த ஊழியருக்கு 3,500 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. […]

இலங்கை

இலங்கையில் இணைய வழி கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • June 21, 2023
  • 0 Comments

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழி கடவுச்சீட்டு முறைமையின் கீழ் அதிகளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இணைய வழியில் விண்ணப்பம் கோரல் திட்டம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையின் ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்கள் தங்களது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற, 1962 என்ற விசேட இலக்கத்திற்கு தொடர்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியருக்கு அடித்த 55 மில்லியன் பவுண்ட் ஜாக்பாட் பரிசு

  • June 20, 2023
  • 0 Comments

செவ்வாயன்று நடந்த டிராவில் இங்கிலாந்து டிக்கெட் வைத்திருப்பவர் 55 மில்லியன் பவுண்டுகள் யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி எண்கள் 11, 17, 28, 32 மற்றும் 35 என்பதுடன் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் 05 மற்றும் 06 ஆகும். சண்டே டைம்ஸ் ரிச் லிஸ்ட் படி, வெற்றியாளர் இங்கிலாந்து கால்பந்து வீரர் ஹாரி கேனை விட (£51m) செல்வந்தராக இருப்பார். இந்த மாத தொடக்கத்தில், மற்றொரு பிரித்தானியா டிக்கெட் வைத்திருப்பவர் EuroMillions டிராவில் 111.7 மில்லியன் பவுண்ட் […]

error: Content is protected !!