கருத்து & பகுப்பாய்வு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • June 23, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணி விசாவிற்கு விண்ணப்பிக்க, நீங்கள் செல்ல வேண்டும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம். இந்த கட்டுரையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணி விசாவிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான சில படிகள் மூலம் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் வேலை வாய்ப்பைப் பெற்றவுடன், உங்கள் பணி விசா மற்றும் குடியிருப்பு அனுமதியைப் பெறுவீர்கள், இறுதியாக, இந்த துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க நாட்டில் உங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். வேலை, முதலீடு, தொழில்முனைவு, […]

முக்கிய செய்திகள்

செயலிழந்த YouTube சேவைகள் – நெருக்கடியில் பயனாளர்கள்

  • June 23, 2023
  • 0 Comments

YouTube, Youtube TV சேவைகள் தடங்கலை எதிர்நோக்குவதாக Downdetector.sg இணையத்தளம் தெரிவித்துள்ளது. நேற்றிலிருந்து இந்த தடங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று காலைவரை YouTube சேவைத் தடங்கல் தொடர்பில் 13,000க்கும் அதிகமானோரும் YouTube TV சேவைத் தடங்கல் தொடர்பில் 3000க்கும் அதிகமானோரும் முறைப்பாடு செய்துள்ளதாக Downtector.com தெரிவித்தது. அதன் பின்னர் YouTube, Youtube TV சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாழ்வியல்

வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • June 23, 2023
  • 0 Comments

சிலருக்கு இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய தோற்றம் இருக்கும். இது நமக்கு அதிகப்படியான மன உளைச்சலை கொடுக்க கூடும். இது போன்ற முக சுருக்கம் மற்றும் வயது அதிகமான தோற்றத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். இதற்கு அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கும் உணவுகளை எடுக்க வேண்டும். அதாவது, காய்கறிகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களை சாப்பிட வேண்டும். ஒவ்வொரு வாரத்திற்கும் நீராவி பிடிப்பதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். அத்துடன் […]

உலகம்

Titan நீர்மூழ்கிக் கப்பலின் வெடிப்பு – அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

  • June 23, 2023
  • 0 Comments

Titan நீர்மூழ்கிக் கப்பலின் வெடிப்பை அமெரிக்கக் கடற்படை கண்டறிந்ததாக தெரியவந்துள்ள நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போன சிறிது நேரத்தில் கடலடி ஒலிக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்தது. அந்த ரகசிய ஒலிக் கண்காணிப்பு அமைப்பு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் காணாமற்போன சிறது நேரத்தில் வெடிப்பு பதிவானதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்கக் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார். பதிவின் தரவுகளை ஆராய்ந்ததில் அது ஒரு வெடிப்பைக் குறிக்கும் விதத்தில் இருந்ததாக அந்த அதிகாரி […]

இலங்கை

கொழும்பில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம் – மர்ம மாணவனை தேடும் பொலிஸார்

  • June 23, 2023
  • 0 Comments

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 8 தடவைகள் பாரிய வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால் சுடப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவருக்கே இச்சம்பவம் நேர்ந்துள்ளது. சிறுமியை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம் அறிவிப்பு!

  • June 23, 2023
  • 0 Comments

ஆப்பிள் தனது சுய பழுதுபார்க்கும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம், தங்களது ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க குறிப்புகளையும் ஆப்பிள் வழங்குகிறது. ஆப்பிள் இப்போது […]

இலங்கை

இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ள புதிய மொழி!

  • June 23, 2023
  • 0 Comments

இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில், ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணிகளை முறைமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது, அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாடசாலைகளில் 6ஆம் தரம் முதல் ஜப்பானிய மொழியை பாடமாக இணைப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதி

  • June 23, 2023
  • 0 Comments

அமெரிக்க ஆய்வகத்தில் இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. செயற்கை இறைச்சிக்கு அனுமதி வழங்குமாறு Upside Foods மற்றும் Good Meat ஆகிய இரண்டு நிறுவனங்களும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் (Lab-grown meat) இறைச்சியை அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோழி, மாடு போன்றவற்றின் உயிரணுக்களில் இருந்து நேரடியாக ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதியளிக்கும் இரண்டாவது நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரில் […]

ஐரோப்பா

பிரான்ஸ் வாகன சாரதிகள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்

  • June 23, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவதாக தெரியவந்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த விடயம் தெரியவந்துள்ளது. இன்னும் துல்லியமாக, 42% சதவீதமானோர் அதிவேகமாக பயணிக்கின்றனர். 130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர். இவர்களில் 3% சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் 38% சதவீதமானோர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு ஊதியத்தில் வழங்கப்படும் தொகை அதிகரிப்பு?

  • June 23, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முதியோர்களை பாராமரிப்பதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்குகின்ற தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. ஜெர்மனியில் ஏற்கனவே ஃவிழைக்க பஸியர் என்று சொல்லப்படுகின்ற முதியோர்களை பராமரிப்பதற்காக ஒருவர் தமது ஊதியத்தில் இருந்து பங்களிக்கும் தொகையானது அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகின்றது. இதுவரை காலமும் ஒரு நபரானவர் தமது ஊதியத்தில் 3.05 சதவீதத்தை ஃவிழைக்க பஸியருக்காக வழங்கி வந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளையில் பிள்ளைகள் இல்லாதவர்கள் […]

error: Content is protected !!