இலங்கை

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு

  • December 1, 2025
  • 0 Comments

சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை மட்டுமே மீட்புக்குழுவினரால் கைப்பற்ற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை

  • December 1, 2025
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து […]

பொழுதுபோக்கு

இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி!

  • December 1, 2025
  • 0 Comments

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது அதன் விமானியே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில […]

இலங்கை

இலங்கையில் இதுவரை 355 பேர் மரணம்

  • December 1, 2025
  • 0 Comments

நாட்டில் டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று மாலை வரை 334 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்ட புதிய தகவல்களின் படி 355 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், பரீட்சைகள் மற்றும் பயிற்சித்திட்டங்கள் அனைத்து இதில் […]

இலங்கை செய்தி

மறுகட்டமைப்புக்காக நிதி திரட்டப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

நாட்டில் பேரிடரால் ஏட்பட்டுள்ள அழிவுகளில் இருந்து நாட்டை மறுசீரமைப்பதட்கு தேவையான மூலதனத்தை திரட்டும் (Fund) பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த நிதியை மேற்பார்வையிடுவதற்காக தனியார் துறை உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நிர்வாகக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: “அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

10 டன் நிவாரணப் பொருட்களுடன் வந்திறங்கியது இந்திய விமானம்

  • November 30, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை பேரிடருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாக கூறியுள்ளார். அதற்கமைய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மற்றொரு சி-130ஜே (C-130J) விமானம், சுமார் 10 டன் பேரிடர் மீட்புப் பொருட்களை ஏற்றியபடி கொழும்பில் தரையிறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வானிலையைத் தொடர்ந்து, நடந்து வரும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்காக, இந்தப் பொருட்களில் ‘பிஷ்ம் கியூப்ஸும்’ (BHISHM Cubes) மற்றும் ஒரு மருத்துவக் […]

பொழுதுபோக்கு

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி 334 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது.

இலங்கை செய்தி

மாவில் ஆற்று நீர்த்தேக்கக் கரை உடைப்பு

  • November 30, 2025
  • 0 Comments

மாவிலாறு அணை மற்றும் நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான நிலையில் உடைந்து காணப்படுவதினால் மூதூர். வெறுகல் . சேறுவில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இன்று (30) மாலை வரைக்கும் 16, 604 குடும்பங்களை சேர்ந்த 54 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 204 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 477 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மூதூர்,தம்பலகாமம், வெருகல், […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

  • November 30, 2025
  • 0 Comments

வென்னப்புவ பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் லுணுவில கிங் ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!