பேராதனை பல்கலைக்கழகத்தில் இதுவரை 5 தற்கொலை சம்பவங்கள்;MP இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
பேராதனை பல்கலைக்கழகத்தில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய MP, உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த மேலும் இரண்டு மாணவர்களுக்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய நிலை இதுவாகும் என சுட்டிக்காட்டிய MP, மாணவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழக்கமான உணவுகளை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் […]












