ஜனாதிபதியின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முயற்சியானது ஐம்பது வீதம் நிறைவேறியுள்ளதாக பிரித்தானியாவில் வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். 50வீதம் தீர்வினை தமிழ் மக்கள் அடைந்துள்ளார்கள் என்ற கூற்றானது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெல்லாவெளியில் நடைபெற்றது. கடந்த கொரனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி […]













