இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,691 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், ஒட்டுசுட்டான் […]

இலங்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் குறைவதாக அறிவிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. களனி ஆற்றின் நாகலகம் வீதியின் அளவீட்டில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் நீர்மட்டம் 6.9 அடியாக இருந்தது, பின்னர் பிற்பகல் 3:00 மணியளவில் 6.75 அடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், ஹன்வெல்ல அளவீட்டில் நீர்மட்டம் பிற்பகல் 2:00 மணியளவில் 7.14 அடியாக இருந்தது, பிற்பகல் 3:00 மணியளவில் 7.07 அடியாகக் குறைந்தது, இருப்பினும் இது ஆபத்தான மட்டத்தில் உள்ளது. கூடுதலாக, களு கங்கை மற்றும் மல்வத்து ஓயா […]

இலங்கை செய்தி

வெள்ளத்தால் கோம்பாவில் பாலம் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • December 2, 2025
  • 0 Comments

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிறி சுப்ரமணிய வித்தியாலயாசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கோம்பாவில்லுக்கு செல்லும் பாலம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையின் தாக்கத்தால் குறித்த பாலம் பிரதான வீதியில் இருந்து பிரிந்து இரு துண்டுகளாக பிரிந்து அதன் நடுவே நீர் வேகமாக பாய்ந்து கொண்டு உள்ளது. இதனால் குறித்த வீதியூடாக கோம்பாவில்லுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் […]

இலங்கை

சிலாபம் வைத்தியசாலை நாளை மீண்டும் திறக்கப்படும்

  • December 2, 2025
  • 0 Comments

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அதன் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று நீர் விநியோகமும் மீண்டும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சேதமடைந்த ஏனைய அனைத்து பிரிவுகளையும் படிப்படியாகவும் விரைவாகவும் மீட்டெடுக்கப்பட்டு […]

இலங்கை

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அதிரடி முடிவு எடுக்கப்பட்டது

  • December 2, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் மின் தடைகளால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மட்டும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் செயலாளர் நலகா கலுவேவே குறிப்பிட்டார். […]

இலங்கை

மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் 8 பேர் சடலங்களாக மீட்பு

  • December 2, 2025
  • 0 Comments

நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், அத்தோட்டத்தைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன. கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரை 8 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினமும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மேலும் இரு பாலியல் குற்றவாளிகள் தவறுதலாக விடுதலை!

  • December 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் இரு வன்முறை அல்லது பாலியல் குற்றவாளிகள் தவறுதலாக   விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரை 91 கைதிகள் இவ்வாறு தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நீதி அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக வாரத்திற்கு மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மூன்று வாரங்களில் 12 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் கடல் சீற்றம்

  • December 2, 2025
  • 0 Comments

முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்து செல்வதுடன் கடலலை அதிகமாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்போது கடலலையின் சீற்றம் அண்ணளவாக 10 அடிக்குமேல் உயர்ந்து கடல் எது கரை என தெரியாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முன்னைய நாட்களை விட காற்றின் அளவும் மழையும் குறைவடைந்ததனால் முல்லைத்தீவு கடற்கரையின் சீற்றம் சற்று குறைவடைந்து செல்வதுடன் கடலலை கூடுதலாக இருக்கின்றது. எனினும் தேவையற்ற […]

இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் தவறுகளை சுட்டிக்காட்டிய ரணில்!

  • December 2, 2025
  • 0 Comments

சமீபத்திய வெள்ளத்தைத் தடுக்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கத் தவறியது மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பை மீறுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேரனர்த்தம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் நவம்பர் 28 அன்று அல்லாமல் நவம்பர் 27, 2025 அன்று செயல்படுத்தப்படவில்லை. நடவடிக்கைகளுக்கு மிக […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!

  • December 2, 2025
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (02) காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!