இலங்கை

பேரிடர் குறித்து தவறிழைப்பு: தெரிவுக்குழு அமைக்குமாறு வலியுறுத்து!  

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேற்படி வலியுறுத்தலை விடுத்தார். “ இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, குறித்த அனர்த்தம் பற்றி அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததா? இது பற்றி வளிமண்டளவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. மௌன போக்கு […]

செய்தி வாழ்வியல்

வெள்ளப் பணிகளில் ஈடுபடுவோர் டாக்ஸிசைக்ளின் எடுக்குமாறு பரிந்துரை!

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்குப் பின், சுகாதார அதிகாரிகள் எலிக் காய்ச்சல் (Leptospirosis / Rat fever), வயிற்றுப்போக்கு (diarrhoea), சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு தோல் நோய்த்தொற்றுகள் (skin infections) ஆகியவற்றின் அதிகரிப்பு குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். ஆலோசகரும் சமூக மருத்துவருமான அத்துல லியனபத்திரண (Dr. Athula Liyanapathirana) அவர்கள், அசுத்தமான தண்ணீரால் நோய்கள் எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் காய்ச்சி ஆற வைத்த அல்லது பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு பங்களாதேஷ் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அங்கு நடந்து வரும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் வகையில், பங்களாதேஷ் இன்று பிற்பகல் (டிசம்பர் 3) மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. பங்களாதேஷ் விமானப்படைக்குச் சொந்தமான C-130 ரக விமானம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி மயூரி பெரேரா (Mayuri Perera) இந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் இலங்கையில் […]

இலங்கை செய்தி

திருகோணமலை மட்டக்களப்பு வீதி புனரமைப்பு பணிகள் தீவிரம்!!

  • December 3, 2025
  • 0 Comments

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி இறால் குழி பகுதியை புனரமைக்கும் பணிகள் இன்று (03) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாக திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் கண்காணிப்பின் கீழ் வேகமாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை குறித்த வீதியின் ஊடாக மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டிகள் பயணிக்கின்ற போதிலும் பஸ் போக்குவரத்துக்கள் இன்னும் இடம்பெறவில்லை. […]

உலகம் செய்தி

MH370 விமானத்தை தேடும் பணி மீள ஆரம்பம்!

  • December 3, 2025
  • 0 Comments

2014 ஆம் ஆண்டு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 ஐத் தேடும் பணி டிசம்பர் 30 ஆம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் மாயமானது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமானம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. அண்மையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானத்தை கண்டதாக நபர் ஒருவர் கூறியிருந்தார். […]

கருத்து & பகுப்பாய்வு

கக்குவான் இருமலை கட்டுப்படுத்தும் நாசி ஸ்ப்ரே தடுப்பூசி!

  • December 3, 2025
  • 0 Comments

கக்குவான் இருமலுக்கான நாசி ஸ்ப்ரே  தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். BPZE1 எனப்படும் இந்த தடுப்பூசி மூக்கு மற்றும் தொண்டையில் வசிக்கும் கக்குவான் இருமல் பாக்டீரியாவை தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை போல் அல்லாமல் இந்த நாசி ஸ்ப்ரே அனைத்து வயதினருக்கும் நீண்டகால பாதுகாப்பை வழங்குவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே பொது சுகாதார அமைச்சர் ஆஷ்லே டால்டன் (Ashley Dalton) இந்த சோதனையை ஒரு ‘பெரிய திருப்புமுனை’ என்று பாராட்டியுள்ளார். இது […]

இலங்கை

இலங்கையில் அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும் நீக்கம்

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கையில் அமுலிலிருந்த அனைத்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களத்தின் அறிக்கையின் படி, “பிரதான ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகின்றது. தற்போது எந்த ஆறும் பிரதான வெள்ள மட்டத்தில் இல்லை. நாகலகம் வீதியில் உள்ள களனி ஆற்றில் மட்டுமே இன்னும் ஒரு எச்சரிக்கை மட்டம் காணப்படுகிறது. இருப்பினும் அதன் நீர் மட்டம் குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மழைவீழ்ச்சி மிகக் […]

ஐரோப்பா

இங்கிலாந்து குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தம் முன்மொழிவு!

  • December 3, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ( Wales) உள்ள குற்றவியல் நீதிமன்ற அமைப்பில் புதிய சீர்த்திருத்தங்களை நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி ( David Lammy) முன்மொழிந்துள்ளார். சமீபத்தில் பிரித்தானியாவின் சிறைச்சாலைகளில் இருந்து 90இற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த சீர்த்திருத்தம்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய திருட்டு உள்ளிட்ட குற்றங்கள், மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சிறைதண்டனை  விதிக்கக்கூடிய வழக்குகளுக்கான ஜூரி விசாரணை ( jury trial)  உரிமையை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள்  […]

இலங்கை

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

  • December 3, 2025
  • 0 Comments

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கோரியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க நாளை அறிவிக்கவும். “பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது தெய்வீகக் கடமையாகும்” எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கை

பேரழிவுக்குப்பின் இலங்கைக்கு படையெடுத்த 2,300 சர்வதேச பயணிகள்

  • December 3, 2025
  • 0 Comments

2,300 சர்வதேச பயணிகளுடன் இன்று (03)மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பல் நாட்டை வந்தடைந்தது. “மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இந்த கப்பலை வரவேற்றது. கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை பேரழிவிற்குப் பின்னர் முதல் முறையாக பெரிய சொகுசு சுற்றுலா கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த சொகுசு கப்பலில் இருந்த 2,300 பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்ட ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் […]

error: Content is protected !!