மணிப்பூரில் தொடரும் பதற்றம்! பொலிஸார் உட்பட 4 பேர் பலி
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க 2 மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு குகி, நாகா உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது கலவரமாக மாறி பலர் வேறு மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களும் […]













