உலகம்

புனித குர்ஆன் எரிப்பு: ஐநா மனித உரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

புனித குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது. பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிற நாடுகளும் கூட்டாக இந்தக் கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தன இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 28 நாடுகளும், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பில் […]

வட அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் கனடா

  • July 12, 2023
  • 0 Comments

உக்ரைன் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா தெரிவித்துள்ளது. போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.லாட்வியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கொத்தணி குண்டு பயன்பாட்டை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதனை கனடா முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கும் உலக நாடுகளின் வரிசையில் கனடா முன்னிலை வகிக்கின்றது. இந்த பிரகடனம் […]

இந்தியா

நீதிமன்றில் முன்னிலையான செந்தில் பாலாஜி! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் திகதி வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடையாறில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வைத்து கடந்த மாதம் 14ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். . இந்நிலையிலே […]

இலங்கை

வயிற்று வலிக்கு போடப்பட்ட ஊசி…உடல் நீல நிறமாகி யுவதி மரணம்!

  • July 12, 2023
  • 0 Comments

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவர் வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10ஆம் திகதி கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை (11) […]

இலங்கை

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – ஏறாவூருக்கு துபாய் நாட்டு பிரதிநிதிகள் விஜயம்

  • July 12, 2023
  • 0 Comments

ஏறாவூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துபாய் நாட்டின் உதவியில் அமைச்சர் நசீர் வேண்டுகோளில் பல்வேறு திட்டங்கள் அமுல் சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு இணைத்தலைவருமான அல்ஹாஜ் நசீர் அஹமத் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் பயனாக துபாய் நாட்டு உதவியில் ஏறாவூர் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல […]

புகைப்பட தொகுப்பு

மண்டைதீவில் கடற்படையினருக்காக அபகரிக்கப்படும் பொது மக்களின் காணிகள்…

  • July 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை அபகரிக்க திட்டம். வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது இவ் […]

இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது! முன்னாள் போராளி

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து போரிட்டவர்களாக இரண்டு தரப்பு இருக்கின்றது. ஒன்று அரசதரப்பு மற்றையது விடுதலைப்புலிகள் தரப்பு இருக்கின்றது  என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் விசாரணை தொடர்பிலும், இராணுவத்தினர் தம்மை சந்தித்தது தொடர்பாகவும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் இன்றையதினம் (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் விசாரணை தொடர்பிலும் , இராணுவத்தினர் எங்களை சந்தித்தது தொடர்பாகவும் சில […]

பொழுதுபோக்கு

வியாபாரத்தில் மிரட்டும் லியோ… புதிய அப்டேட் இதோ….

  • July 12, 2023
  • 0 Comments

லியோ படத்தின் தெலுங்கு உரிமத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விக்ரம் படத்தின் மெகா ஹிட் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஒரு படத்தில் மூன்று நட்சத்திரங்களை வைத்து சமாளிப்பதே பெரிய வேலை என்று […]

ஆசியா

ஒரேபாலின திருமணத்தை அங்கீகரித்துள்ள நேபாளம்!

  • July 12, 2023
  • 0 Comments

தெற்காசியாவில் LGBTQ+ மக்களுக்கான திருமண சமத்துவத்திற்கான முதல் படியாக, ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கும் வரை ஒரே பாலின மற்றும் பாரம்பரியமற்ற தம்பதிகள் தற்காலிகமாக பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி டில் பிரசாத் ஷ்ரேஸ்தா தீர்ப்பளித்தார். அதேவேளை பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் ஒருபாலின திருமணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தெற்காசியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை […]

இலங்கை

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜூன் 2023 இல் 240 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கி அரசாங்கம் கடைசியாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் அதன் நீடித்த கடுமையான […]

error: Content is protected !!