நீதிமன்றில் முன்னிலையான செந்தில் பாலாஜி! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் திகதி வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடையாறில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வைத்து கடந்த மாதம் 14ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். .
இந்நிலையிலே இன்று மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)