இலங்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • July 19, 2023
  • 0 Comments

சமீப காலமாக இலங்கையில் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் (19.07) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் தங்கத்தின் விலை 1977 டொலர்கள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 25 டொலர்கள் அதிகரிப்பு என தரவுகள் தெரிவித்துள்ளன. இதற்கமைய இலங்கையில் 24 கெரட் பவுன் ஒன்றின் விலை 167,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கெரட் பவுன் ஒன்று 157,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை […]

விளையாட்டு

மெஸ்ஸியின் முதல் ஆட்டத்தைக் காண 110,000 டொலருக்கு விலைபோன நுழைவுச்சீட்டு

  • July 19, 2023
  • 0 Comments

காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி அமெரிக்காவின் Inter Miami காற்பந்து அணியில் தமது முதல் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆட்டம் இடம்பெறவுள்றது. அதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. சில இருக்கைகளுக்கான நுழைவுச்சீட்டின் விலை 110,000 டாலர் என்று Vivid Seats இணையத்தளத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. MLSஇல் பதிவான வரலாறு காணாத விலையாக அது கருதப்படுகிறது. குறைந்த விலை நுழைவுச்சீட்டுகளும் உள்ளன. அவை சராசரியாக 487 டொலருக்கு விற்கப்படுகின்றன. மெஸ்ஸி கடந்த சனிக்கிழமை […]

இலங்கை

உண்மையை பேசுங்கள் – இலங்கை அரசியல் வாதிகளிடம் உலக வங்கியின் பணிப்பாளர் கோரிக்கை!

  • July 19, 2023
  • 0 Comments

தயவ செய்து உண்மையை பேசுங்கள் எனவும் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல எனவும், இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (18.07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது எனக் கூறினார். இலங்கை தற்போது எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

மேலாடை வாங்கும் காசுக்கு தக்காளி வாங்கினேன்… போட்டோ வீடியோ போட்டு கலக்கும் பிரபலம்…

  • July 19, 2023
  • 0 Comments

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ளது. பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. சமீபத்தில், தர்பார் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தக்காளி விலை பாதிப்பால் தான் குறைவான அளவே அதை பயன்படுத்தி வருகிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அவரை வம்புக்கு இழுக்கும் வகையில் பிக் பாஸ் ஓடிடி பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவேத் தக்காளியில் கம்மல் செய்து இரண்டு காதுகளிலும் தொங்கப்போட்டுக் கொண்டு, ஒரு தக்காளியை கடித்து […]

ஐரோப்பா

பிரித்தானியா மக்களுக்கு ஓர் அவசர செய்தி!

  • July 19, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஜுனியர் வைத்தியர்கள்  இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்படி நாளை (20.07) முதல் வரும் சனிக்கிழமை வரை வெளிநடப்பு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜுனியர் வைத்தியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதற்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், பணிப்புறக்கணிப்பை நீட்டித்துள்ளனர். இதன்காரணமாக NHS சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவசர சிகிச்சைகளுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தமானது எண்ணற்ற நோயாளிகளை […]

அறிந்திருக்க வேண்டியவை

காலில் கருப்பு கயிறு கட்டுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • July 19, 2023
  • 0 Comments

தற்போதைய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது அதிகரித்து வருகிறது. வெறும் கயிறு மட்டும் அல்லாமல், அத்துடன் கிரிஸ்டல் அல்லது யானை, இதயம், வட்டம். முத்து என சில லாக்கெட்டுகளையும் இணைத்து போடுவார்கள். இது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்படும் சில விஷயங்களில் ஒன்று. நமது பாட்டி தாத்தாக்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்து வந்தாலோ, அல்லது விபத்துக்கள் ஏற்பட்டாலோ கருப்பு […]

ஆஸ்திரேலியா

2027ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

  • July 19, 2023
  • 0 Comments

2027ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கலாம் என்று சமீபத்திய அறிக்கை கணித்துள்ளது. CSIRO தயாரித்துள்ள இந்த அறிக்கையின்படி, சூரிய ஒளி, நீர், காற்றாலை மற்றும் நிலக்கரி போன்ற அனைத்து மூலங்களிலிருந்தும் மின்சார உற்பத்திக்கான செலவு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கோவிட் சீசன் முடிந்த பிறகு எரிசக்தி துறை மீண்டு வரும்போது உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி உருவாக்கப்பட்டது என்பதை இந்த அறிக்கை உள்ளடக்கியது. உலகின் முக்கிய எரிசக்தி வழங்குனர்களில் இரு நாடுகளான அந்த […]

இலங்கை

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தி்யசாலை ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

  • July 19, 2023
  • 0 Comments

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று (19.07) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வைத்தியசாலையின் அவசர சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் என சங்கம் கூறுகிறது. இதேவேளை வைத்தியசாலைகளில்  தரமற்ற மருந்து பாவனைக் குறித்த விசாரணை அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா

சுவிஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

  • July 19, 2023
  • 0 Comments

சுவிஸ் ஆல்ப்ஸில் உள்ள பிட்ஷ் (Bitsch) கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு மூண்ட தீயை அணைக்க 150 தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர். 200க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீ பரவுவதைத் தடுக்கப் பெரிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பாளர்களுடன் பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்களும் அதற்கு உதவுகின்றன. மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ உயிருடற்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. கட்டடங்களுக்கும் பாதிப்பில்லை. மூண்ட காரணம் விசாரிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 100 ஹெக்டர் அளவிலான […]

ஆசியா

பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க பிரஜை!

  • July 19, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குள் அமெரிக்க பிரஜை ஒருவர் எல்லை தாண்டி நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட அமைப்பு இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. குறித்த அமெரிக்க பிரஜை கொரிய எல்லை கிராமத்திற்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும்  அனுமதியின்றி வடபகுதியில் எல்லைத் தாண்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது வடகொரியாவின் காவலில் இருப்பதாகவும் இந்த சம்பவத்தை தீர்க்க ஐ.நா கட்டளை வடகொரியாவுடன் இணைந்து செயல்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி […]

error: Content is protected !!