அறிவியல் & தொழில்நுட்பம் வட அமெரிக்கா

அமெரிக்காவில் தொழில் நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

  • July 19, 2023
  • 0 Comments

அமெரிக்கா கலிபோர்னியாவில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் முதன்முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள எந்த உயிரணுவிலிருந்தும் மனித முட்டைகள் மற்றும் விந்தணுக்களை ஒரு ஆய்வகத்தில் உருவாக்க முடியும். இந்த செயல்முறை vitro gametogenesis (IVG) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், மலட்டுத்தன்மையுள்ளவர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் முதல் முறையாக தங்கள் சொந்த உயிரியல் குழந்தைகளைப் பெறும் திறனைப் […]

தென் அமெரிக்கா

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு; 12 பேர் உயிரிழப்பு

  • July 19, 2023
  • 0 Comments

கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Cundinamarca மாகாணத்தில் அமைந்துள்ள Quetame பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மண் மூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் துறையினர், ராணுவம், செஞ்சிலுவை சங்கத்தினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட மீட்புக் குழு வீரர்கள் நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • July 19, 2023
  • 0 Comments

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (18.07) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த போதிலும் பாண் உற்பத்திக்கு விற்கப்படும் கோதுமை மாவின் மொத்த சில்லறை விலை 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படும் மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் […]

வட அமெரிக்கா

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல மொடல் அழகி!

  • July 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது குற்றத்தை […]

இலங்கை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்!

  • July 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் உள்ள விடுதியில், போதை ஊசி ஏற்றிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண போதனா போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று (18.07) இரவு விடுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார் என சடலத்தை பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான […]

இலங்கை

திரிபீடக புத்தகத் தொடரை இணையத்தில் வெளியிட நடவடிக்கை!

  • July 19, 2023
  • 0 Comments

தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள சம்புத்த ஜெயந்தி திரிபீடக புத்தகத் தொடரை இணையத்தில் வெளியிட பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் வெளியிடப்படும் என்றும், பின்னர் அச்சிடப்படும் என்றும் தெரிவித்தார். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் திரிபீடகத்தை ஆராய்வதில் ஆர்வமுள்ள அனைத்து பாமர, மதகுருமார்களின் சார்பாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மகாநாயக்கர்களின் ஆலோசனை மற்றும் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் ரக்ஷிதா… அப்படி என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க…

  • July 19, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. கருப்பு பெண்ணாக இந்த சீரியலில் நடித்ததால்… பலரும் இவர் கருப்பாக இருக்க கூடிய நடிகை என்றே நினைத்த நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் தான் இவர் கருப்பு நிறத்தில் தன்னை காட்டிக்கொள்ள மேக்கப் போட்டு நடித்தார் என்று தெரியவந்தது. மேலும் இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால், கருப்பான தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ரக்ஷிதா தெரிவித்திருந்தார். இந்த சீரியலுக்கு பின்னர், […]

வாழ்வியல்

பல்வலியை 10 நிமிடங்களில் இலகுவாக போக்கும் பாட்டி வைத்தியம்!

  • July 19, 2023
  • 0 Comments

தலைவலியைப் போல பல்வலியும் ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். சாதாரணமாக தண்ணீர் குடிக்கக் கூட முடியாமல் நம்மை அவஸ்த்தைப்பட வைக்கும் பல்வலியை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். பின் வரும் வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். 1. கிராம்பு ஒன்றை எடுத்து கடைவாய் ஓரம் அதக்கிக் கொண்டால் பல்வலி குறையும். 2. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, பல் வலி இருக்கும் […]

இலங்கை

வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் – கெஹலிய ரம்புக்வெல்ல!

  • July 19, 2023
  • 0 Comments

100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனால்தான் மருத்துவமனைகளுக்கு அருகில் மலர்வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகிறது எனவும், தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 குழந்தைகளும் அப்போது சிறுமி […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றும் கும்பல் – சுற்றவளைத்த பொலிஸார்

  • July 19, 2023
  • 0 Comments

இலங்கை மக்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றும் கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலுக்காக, சட்டவிரோதமாக நபர்களை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர், பதுளை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இத்தாலி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில், தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி, சில நபர்களிடம் அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!