ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரவுள்ள புதிய சட்டம் – மக்களிடம் விசேட கோரிக்கை

  • July 20, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில், சைபர் குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் மீட்கும் தொகையை செலுத்த வேண்டாம் என முதல் சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏர் மார்ஷல் டேரன் கோல்டி அழைப்பு விடுத்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் கப்பம் செலுத்தப்பட்ட போதிலும் திருடப்பட்ட தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏர் மார்ஷல் டேரன் கோல்டி இக்கி 2023-30 காலப்பகுதியில் புதிய இணைய பாதுகாப்பு உத்தியை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும், அதற்கேற்ப ஆஸ்திரேலியாவில் பல இணைய சட்டங்களில் மாற்றங்கள் இருக்கலாம் […]

இலங்கை

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டு பெறும் 2,678 இலங்கையர்கள்

  • July 20, 2023
  • 0 Comments

தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையருக்கு சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையரின் பட்டியல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கிடைத்துள்ளது. 2,678 பேரில், இலங்கை பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகிய இரண்டையும் கொண்டவர்களுக்கு சகல நாட்டு கடவுச்சீட்டுகளையும் வழங்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT-க்கு போட்டியாக மார்க் அறிமுகம் செய்த புதிய AIயின் சிறப்பம்சம்

  • July 20, 2023
  • 0 Comments

ChatGPT-க்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை Facebook செயலியின் தாய் நிறுவனமான மெட்டா உருவாக்கியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீல நிற உடையணிந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார். லாமா-2 […]

ஐரோப்பா

இத்தாலியில் வெப்ப அலை தாங்காமல் அலறும் மக்கள்! ஒரு நிமிடத்திற்கு 6 பேர் மருத்துவமனையில்

  • July 20, 2023
  • 0 Comments

இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் உச்சக்கட்ட வெப்பம் காரணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்னர். நீரிழப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெப்ப அலை தாங்க முடியாமல், மக்கள் குடிநீருக்காக வரிசையாக நின்று வாங்கி அருந்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கிறது. இத்தாலியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில் மக்களுக்கு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது. வெப்பம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

17.85 மில்லியன் மீட்பு – விசாரணை வலையில் சிக்கப்போகும் கோட்டாபய

  • July 20, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27ஆம் திகதி அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே வாக்குமூலம் பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைப்பொன்று மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பணம் இலஞ்சம் தொடர்பான குற்றங்களுக்குள் அடங்ககூடியதாக என்பது குறித்து விளக்கமளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை […]

ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகளின் பரிதாப நிலை

  • July 20, 2023
  • 0 Comments

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் Pas-de-Calais கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா செல்வதற்கு இந்த அகதிகள் குழுவினர் முயற்சித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில், சிறிய மீன்பிடி படகு ஒன்றில் 48 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், Le Touquet கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். கடலில் வைத்து அகதிகள் மீட்கப்பட்டு மீண்டும் Le Touquet பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதிக்கான செலவு தொடர்பில் வெளியான தகவல்!

  • July 20, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாண்டுக்கான செலவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபத் இம்மானுவல் மக்ரோனுக்கான செலவு 315,808 யூரோக்கள் ஆகும். இந்த தொகையில் ஜனாதிபதிக்கான சிகை அலங்காரம் மற்றும் ஆடைகளுக்கான செலவு சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சிறிய அளவில் இந்த தொகை அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 292.454 யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களின் கொடூர செயல்

  • July 20, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மாணவர்கள் ஒன்று கூடி நடத்திய விழாவில் மாணவர்கள் மீது வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு ஜெர்மனியின் நகரமான டொட்லிஸ் என்ற பிரதேசத்தில் ஒரு உயர்தர பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் அபிடு என்று சொல்லப்படுகின்ற இந்த கல்வியை முடித்த பின்னர் அவர்கள் ஒரு விழாவை ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்த விழாவானது அப்பிதேசத்தில் உள்ள டிஸ்கோ என்று சொல்லப்படுகின்ற நடனம் ஆடுகின்ற இடத்தில் […]

ஆசியா

சிங்கப்பூரில் கோர விபத்து – 26 வெளிநாட்டு ஊழியர்கள் படுகாயம்

  • July 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – கிராஞ்சி விரைவுச்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று லொரிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து 18 அன்று காலை 7:10 மணியளவில் பொலிஸார் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது. புக்கிட் திமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் வழியில் உள்ள சோவா சூ காங் வே மேம்பாலம் அருகே […]

இலங்கை

கண்டி மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

  • July 20, 2023
  • 0 Comments

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த, நுகவெல, பலனகல, அஸ்கிரிய, வேகிரிய, புதிய பல்லேமுல்ல, பழைய பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிகில்ல, மெதவல, ஹுலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மின்சார சபையின் அவசர திருத்த […]

error: Content is protected !!