இலங்கை

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு

மன்னார் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி வழங்கப்பட்ட சுமார் 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) காலை வைபவ ரீதியாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையின் பொறுப்பு நிலையின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார். .இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் […]

பொழுதுபோக்கு

நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது அதர்வாவின் “மத்தகம்” டீசர்

  • July 21, 2023
  • 0 Comments

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது குட்னைட் படம். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனால் கவனிக்கப்படும் கதாநாயகர்களில் ஒருவராகியுள்ளார் மணிகண்டன். இந்நிலையில் அவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் மத்தகம் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இது நீள் இரவு🔥 #Mathagam teaser out Now#TheNightisLong #ComingSoon #HotstarSpecials #MathagamOnHotstar […]

இந்தியா

கோடி கணக்கில் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ. பட்டியல்!

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ₹1,413 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.ஆக இருக்கின்றார். ஜனநாயக சீர்திருத்த சங்கம், 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 4001 எம்.எல்.ஏக்களை ஆய்வு செய்து இந்திய எம்.எல்.ஏக்களின் சொத்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவில் கவுரிபிதனூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறற புட்டசுவாமி கவுடா ரூ.1,267 கோடி சொத்துகளுடன் 2வது இடத்திலும்.காங்கிரஸ் கோவிந்தராஜ் நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ., ஆக […]

வாழ்வியல்

பாத வெடிப்பு மறைய எளிய டிப்ஸ்!

  • July 21, 2023
  • 0 Comments

தோல் வறட்சியும்,  அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில்,  இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும். பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும். பாத வெடிப்பை தவிர்க்க சிலை எளிய டிப்ஸ் வெதுவெதுப்பான […]

ஆசியா

மீண்டும் பூமியில் துளையை உருவாக்கும் சீனா..!

  • July 21, 2023
  • 0 Comments

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பூமியில் 10,000 மீற்றர் துளையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த முறை 10,000 மீற்றர் துளையை உருவாக்குவது இயற்கை எரிவாயு இருப்புகள் தொடர்பில் கண்டறிவதற்கே என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வியாழக்கிழமையில் இருந்து துளையிடும் பணியை துவங்கியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் இந்த துளையிடும் பணியானது முன்னெடுக்கப்படுகிறது.சுமார் 10,520 மீற்றர்கள் வரையில் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் சின்ஜியாங் பகுதியில் […]

இலங்கை

விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி! பொலிசார் விசாரணை

வவுனியா, மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவத்தில […]

இலங்கை

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் சிறைதண்டனை 5 வருடத்திற்கு ஒத்திவைப்பு

  • July 21, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய கடற்றொழிலாளருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினமே நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை […]

இலங்கை

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

  • July 21, 2023
  • 0 Comments

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (21.07) இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த அழகையா மகேஸ்வரன் என்ற 58 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

வவுனியாவில் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

வவுனியா, ஈரப்பெரியகுளம் தும்புத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பரம்பல் ஏற்பட்டதை அவதானித்த அங்கு கடமையில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கும், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் […]

உலகம்

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் – WHO எச்சரிக்கை!

  • July 21, 2023
  • 0 Comments

டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணியாக உள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக 2023-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் ஏறக்குறைய சாதனை அளவை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருவதாகவும், 2000 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு எட்டு மடங்கு அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்திய நிபுணர் டாக்டர் ராமன் வேலாயுதன் கருத்துப்படி, உலக […]

error: Content is protected !!