பொழுதுபோக்கு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “தி மார்வெல்” டிரெய்லர் 4 மொழிகளிலும் வெளியானது

  • July 22, 2023
  • 0 Comments

இந்த தீபாவளிக்கு, மார்வெல் ஸ்டுடியோவின் தி மார்வெல்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியானது. இந்த பண்டிகைக் காலத்தில் தீவிரமான, சாகசம் மற்றும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இது வெளிவருகின்றது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் முதன்முறையாக, கொடிய தீய சக்திகளின் மீது அழிவைக் கட்டவிழ்த்துவிட, பயங்கரமான சூப்பர் ஹீரோக்களின் சக்தி வாய்ந்த மூவரும் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு ஒரு பிளாக்பஸ்டர் சினிமா சாகசத்தை வழங்குகிறார்கள்.. “தி மார்வெல்ஸ்” இல், மிகவும் சக்திவாய்ந்த அவெஞ்சர்களில் ஒருவரான கரோல் […]

உலகம்

உருகுவே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் பென்குயின்கள்‘!

  • July 22, 2023
  • 0 Comments

கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பென்குயின்கள் இறந்துவிட்டதாகத் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பென்குயின்கள் பறவை காய்ச்சலால் உயிரிழக்கவில்லை எனவும், இந்த விடயம் மர்மமாகவே இருப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். மாகெல்லானிக் பென்குயின்கள் அதிகமாக உயிரிழப்பதாகவும், உருகுவேயின் கரையோரங்களில் ஒதுங்குவதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லீசாகோயன் கூறினார். மாகெல்லானிக் பென்குயின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் கூடு கட்டுகின்றன. தெற்கு அரைக்கோளத்தின் குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரைத் தேடி வடக்கே இடம்பெயர்ந்து, பிரேசிலிய மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோவின் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா- ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் – நால்வர் பலி!

  • July 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 4 பயணிகளுடன் இன்று ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஹெலிகாப்டர் அலாஸ்கா ஏரிப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டரில் வேறு யாரேனும் பயணித்தார்களா? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா

போதுமான உறக்கம் இன்றி போராடும் ஆஸ்திரேலிய இளைஞர்கள் – ஆய்வில் முக்கிய தகவல்

  • July 22, 2023
  • 0 Comments

ஏராளமான ஆஸ்திரேலியர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஏறக்குறைய 1/4 பேருக்கு உடல் அல்லது மன நோய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 1,234 இளம் ஆஸ்திரேலியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தங்கள் தூக்கம் ஒழுங்கற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட குறைவாக தூங்குபவர்களில் 1/3 பேர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 சதவீதம் பேர் படுக்கைக்குச் சென்ற பிறகு தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்று […]

வாழ்வியல்

கூந்தல் அடர்த்தியாக வளர இலகுவான வழிகள்!

  • July 22, 2023
  • 0 Comments

பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனைதான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகள் என்ன என்பதே பலரது தலையாய கவலை. இந்த கூந்தல் தைலம் செய்து பயன் படுத்தி பாருங்களேன் . உங்க கூந்தல் கரு கரு என்று அடர்த்தியாக வளரும். மற்ற காரியத்தை போன்று கூந்தலை சுலபமாக நினைத்து விட முடியாது. நமக்கு அழகே கூந்தல் தான். ஒருவர் என்னதான் அழகாக இருந்தாலும் தலையில் முடி இல்லையென்றால் பார்க்க அழகாக […]

பொழுதுபோக்கு

டிஆர்பி-யை எகிற வைக்க வருகின்றது பிக்பாஸ் சீசன் 7… தரமான போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி

  • July 22, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரவேற்பு பெற்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டால் அத்தனை ஷோக்களும் ஓரம் கட்டப்பட்டு விடும். அந்த அளவுக்கு டிஆர்பியில் இந்த நிகழ்ச்சி தான் சக்கை போடு போடும். இதற்கு போட்டியாளர்கள் ஒரு காரணம் என்றாலும் உலக நாயகனின் சாமர்த்தியமான பேச்சு தான் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காகவே அவருக்கு இதுவரை […]

ஆசியா

கிம் ஜாங் உன் ஆட்சிக்கு முடிவு காலம் ஆரம்பம் – தென்கொரியா எச்சரிக்கை

  • July 22, 2023
  • 0 Comments

வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதுவே கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சிக்கு முடிவாக இருக்கும் என்று தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் USS Kentucky போர்க்கப்பல் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்திற்கு வந்துள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப் பயிற்சிகளின் மீது அணு ஆயுதத்தைப்பயன்படுத்த வடகொரியா முயற்சித்தால் கடுமையாகத் திருப்பி தாக்கப்படும் என்றும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளும் அணு ஆயுதத் திட்டங்களும் […]

அறிந்திருக்க வேண்டியவை

30 வயதிற்குள் திருமணம் கட்டாயமா? அறிந்திருக்க வேண்டியவை

  • July 22, 2023
  • 0 Comments

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அப்படி திருமணம் 30 வயதிற்குள் முடித்து விட வேண்டும் இல்லையென்றால் அது வேஸ்ட் என்றே சொல்வார்கள். ரஜினிகாந்தின் படமான பாட்ஷாவில் கூட 3ஆம் 8-இல் செய்யாதது திருமணம் அல்ல என்று கூட சொல்லியிருப்பார். அப்படி 30 வயதிற்குள் திருமணம் ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். ஒன்றாக முன்னேறலாம் உங்கள் எதிர்காலம் குறித்த திட்டங்களை தீட்டும் காலகட்டமான இந்த 20-களில் திருமணம் செய்வது இருவரும் ஒன்றாக இணைந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்கா சென்ற இந்திய மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • July 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்காக சென்ற இந்திய மாணவியை மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுள்ளார். அவர் அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்க்காக சென்று, அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்ததும், சுஸ்ருன்னியா இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியதால், அவர் […]

இலங்கை

இலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – முக்கிய சந்தேகநபரை சுற்றிவளைத்த பொலிஸார்

  • July 22, 2023
  • 0 Comments

அங்குருவாதொட்ட, உருதுதாவ தாய் மகள் என இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்,அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார். இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 வயதான வாசனா குமாரி மற்றும் […]

error: Content is protected !!