இலங்கை

அங்குருவாதொட்ட தாய் மற்றும் பிள்ளையின் உடற்கூற்று பரிசோதனை வெளியாகியது!

  • July 22, 2023
  • 0 Comments

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் கொல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் உருதுதாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்று (22.07) பிற்பகல் கொண்டுவரப்பட்டது. இருவரது உடல்களும் ஒன்றாக புதைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன. அங்கு, தடயவியல் மருத்துவ அலுவலர் வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் […]

இந்தியா

தங்கையின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சகோதரன்!

  • July 22, 2023
  • 0 Comments

மாற்று மத இளைஞரை காதலித்த தங்கையின் தலையை வெட்டிய அண்ணன், தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (18). இவரது சகோதரர் ரியாஸ் (22).இந்நிலையில் , ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிசில் புகார் […]

உலகம்

மனிதர்களை போலவே போதையில் மிதக்கும் சுறாமீன்கள் : ஆய்வாளர்கள் கூறிய தகவல்கள்!

  • July 22, 2023
  • 0 Comments

புளோரிடாவை ஒட்டிய கடல் பகுதியில் பெருமளவிலான கொகோயின் போதைப் பொருட்கள் நீரில் கொட்டப்படுகின்றன. இதனை உண்ணும் கடல் உயிரிணங்கள் போதையில் மிதப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆவணப்படத்திற்காக போதைப்பொருள்கள் கடலில் கொட்டப்பட்டதா என்பதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். நீரில் கொட்டப்படும் கோகோயின் மருந்தை உட்கொண்ட சுறாக்கள் பைத்தியக்காரத்தனமான வழிகளில் செயற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள். புளோரிடாவைச் சுற்றியுள்ள கடல்களில் எண்ணற்ற டன் கண்க்கான கொகோயின் போதைப்பொருளை விட்டுச் சென்றுள்ளதாகவும் இது தெற்கு மற்றும் மத்திய […]

உலகம்

2,00,000 Cadbury Creme முட்டைகளை திருடியவருக்கு 18 மாதங்கள் சிறை!

கிட்டத்தட்ட 2,00,000 Cadbury Creme Eggs திருடிய குற்றத்திற்காக பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட “ஈஸ்டர் பன்னி” என்று அழைக்கப்படும் ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோபி பூல் என்ற 32 வயது நபர், பிப்ரவரி 11 ஆம் திகதி டெல்ஃபோர்டில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் திருடியுள்ளார். மேலும் ₹32,00,000 மதிப்புள்ள கேட்பரி கிரீம் முட்டைகள் நிரப்பப்பட்ட திருடப்பட்ட லாரி வண்டியைக் கொண்டு சென்றதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேக நபரைக் […]

ஐரோப்பா

தீவிரமடையும் போர்! ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு இடையில் ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகளை உக்ரைன் படையினர் வெளியிட்டுள்ளனர். [அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் சமீபத்திய இழப்புகளைக் குறிக்கின்றன] approximately 241,330 (+640) military personnel, 4,140 (+7) tanks, 8,096 […]

அறிந்திருக்க வேண்டியவை

மண் இல்லாமல் வளரும் தாவரங்கள் பற்றி தெரியுமா?

  • July 22, 2023
  • 0 Comments

சுவிஸ் நிறுவனம் ஒன்று மண் இல்லாமல் வளரும் தாவரங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து வணிக இயக்குனர் பெர்ன்ஹார்ட் பாம்கார்ட்னர் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த தகவல்களை கேள்வி, பதில்களாக தொக்குத்து வழங்கியுள்ளோம். கேள்வி :- இந்த திட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள்? தங்கள் நிறுவனத்தில் பணிப்புரியும் 25 பேரைக் கொண்ட குழுவினர், கீரை மற்றும் நறுமண மூலிகைகளை வளர்க்க துணைப்புரிந்துள்ளனர்.  இதற்காக   மண்ணில்லா ஏரோபோனிக் அமைப்பை உருவாக்கியுள்ளோம்.  நீர்பாசனம், ரோபோ மூலம் தெளிக்கப்படுகிறது. கேள்வி :- […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிப்பு!

  • July 22, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டை நடத்தும்‘இந்தியன் 2’

  • July 22, 2023
  • 0 Comments

இந்தியன் 2’ திரைப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ‘இந்தியன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2‘ உருவாகி வருகிறது. ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகி இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. தென்னிந்தியாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி […]

இலங்கை

யாழில் ஆலய உற்சவங்கள் மற்றும் விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் அறிவித்தல்!

யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில், மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்படி வெளிமாவட்டங்களில் இருந்து நிகழ்வுகளுக்காக யானைகள் உள்ளிட்ட விலங்குகளை அழைத்து வரும்போது வனவள திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். உரிய அனுமதியின்றி யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதையும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து […]

இலங்கை

மேலும் இரு அரசியல் கைதிகள் விடுதலை!

  • July 22, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்லையா நவரத்தினத்திற்கு 200 வருட சிறைத்தண்டனையும், சண்முகரத்தினம் சண்முகராசாவிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. விடுதலையான அரசியல் கைதிகளை தமிழ் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துள்ளதோடு, அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களின் வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் […]

error: Content is protected !!