மத்திய கிழக்கு

காங்கோவில் மகனின் இறுதி சடங்கில் 9குழந்தைள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை!

  • July 24, 2023
  • 0 Comments

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் […]

இலங்கை

மதுபானசாலை அருகே பொலித்தீன் உறையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு..!

  • July 24, 2023
  • 0 Comments

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே ஓடும் அருவியில் திங்கட்கிழமை (24) சிசுவின் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அப் பகுதிக்கு சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து சிசுவின் சடலம் பற்றி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஹட்டன் நீதிமன்ற நீதிவான் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் இடத்திற்கு வருகை தந்து கைரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக நோர்வூட் […]

செய்தி

ரோட்ஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – 10 ஆயிரம் பிரித்தானியர்கள் சிக்கி தவிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

கிரேக்கத் தீவின் சில பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கு 10 ஆயிரம் பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பயண நிறுவனமான Tui ரோட்ஸிலிருந்து “மூன்று பிரத்யேக விமானங்களில்” பிரித்தானிய சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தற்போது ரோட்ஸில் ஏழாயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பணிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசியா

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

வங்காளதேசத்தில் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் ஞாயிற்று கிழமை காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புதிய நோயாளிகளில் 1,064 பேர் டாக்கா நகரில் உள்ள மருத்துவமனையிலும் மற்றவர்கள் வேறிடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதே காலகட்டத்தில், டெங்கு பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 176 ஆக […]

வாழ்வியல்

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரா நீங்கள்: இந்த பிரச்சினைகள் வரலாம்!

  • July 24, 2023
  • 0 Comments

தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரையில் ஹார்ட் வேர்க் செய்வதை விட ஸ்மார்ட் வேர்க் செய்வதை தான் புத்திசாலி தனமாக கருதுகிறார்கள். இதற்காக மணிக்கணக்கில் கணினி முன்பு உட்காந்திருப்பவர்கள் தான் அதிகம். அப்படி அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் நீண்டகால பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வர்கள், அதிகளவிலான கலோரிகளை பெறுகிறார்கள் என ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த கலோரிகள் உடலிலேயே தங்குவதால் நாற்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கின்றது. அதுமாத்திரம் […]

பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டார்” பட்டம்… பதிலடிக்கு தயாராகும் ரஜினி

  • July 24, 2023
  • 0 Comments

பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து கொடி கட்டி கெத்தாக பறந்து வருகிறார் ரஜினி. ஆனால் இந்த பட்டத்தை பறிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு கமுக்கமாக வந்த நிலையில், தற்போது அப்பட்டமாகவே விஜய் மற்றும் இவருடைய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அபகரிக்கும் வகையில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். தற்போது இது பற்றியான பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. என்னதான் ரசிகர்கள் ஆசைப்பட்டாலும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி […]

ஆசியா

சுலவேசி தீவில் படகு விபத்து – 15 பேர் பலி!

  • July 24, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று (24.07) அதிகாலை இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த படகில் 40 பேர் பயணித்த நிலையில்இ அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • July 24, 2023
  • 0 Comments

விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இப்போது முழுவதுமாக படங்களில் ஹீரோவாக நடிப்பதில் தான் விஜய் ஆண்டனி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவருடைய நான் படம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்த நிலையில் பிச்சைக்காரன் படம் வேறு தரத்திற்கு அவரைக் கொண்டு சென்றது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது. பிச்சைக்காரன் 2 பெரிய அளவில் வெற்றி […]

இலங்கை

இலங்கையில் பல ரயில் சேவைகள் இரத்து!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில் சாரதிகள் நேற்று (23.07) முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 21 ரயில்கள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 11 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே குறிப்பிட்டார். அதன்படி பிரதான பாதையில் 05 புகையிரதங்களும், புத்தளம் பாதையில் ஒரு புகையிரதமும், வடக்கு புகையிரத பாதையில் மற்றுமொரு புகையிரதமும் இரத்து செய்யப்படுவதாக […]

இலங்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையில் கைது!

  • July 24, 2023
  • 0 Comments

ஸ்பெயின் சுற்றுலா பயணி ஒருவர் செலுத்திய கார் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில், கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த விபத்து கண்டி நுவரெலியா வீதியில் 474/டி கட்டுகித்துல பகுதியில் நேற்று (23.07) இந்த விபத்து நேர்ந்துள்ளகது. விபத்துடன் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், […]

error: Content is protected !!