ஐரோப்பா

பிரித்தானியாவில் பிரபல உணவுப்பொருள் ஒன்றில் நோய்க்கிருமிகள்;விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • July 24, 2023
  • 0 Comments

மயோனேஸ் என்னும் உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவை திரும்பப் பெறப்படுகின்றன. பிரித்தானியாவின் பட்ஜெட் பல்பொருள் அங்காடியான Lidl கடைகளுக்கு, Potts Partnership Ltd என்னும் நிறுவனம் விநியோகிக்கும் மயோனேஸில் கிருமிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அதை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது. Potts’ Truffle Mayonnaise என்னும், 230g அளவுள்ள மயோனேஸ் பாக்கெட்களே திரும்பப் பெறப்படுகின்றன. 2024, ஜூலை best before திகதியும், 18823 என்னும் batch codeம் கொண்ட மயோனேஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட […]

இலங்கை

இலங்கையில் நாணயப் பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கைகள்! ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம்

தற்போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமானது உள்நாட்டு காப்புறுதியாளர்களுக்கான முதலீடு மற்றும் நாணயப் பரிமாற்றத்தை குறைக்கும் சாத்தியம் உள்ளதாக Fitch Ratings மதிப்பிடுகிறது. முன்மொழியப்பட்ட கடன் மறுசீரமைப்புத் திட்டம், காப்பீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உள்நாட்டு நாணய அரசாங்கக் கடனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இதன் காரணமாக, முதலீடு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மூலதனம் மீதான அழுத்தம் குறைவாக இருக்கும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த […]

ஆசியா

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

  • July 24, 2023
  • 0 Comments

சீனாவின் பல பகுதிகளில் கடந்த வார இறுதியில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பிய நிலையில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் […]

இலங்கை

சர்வகட்சி மாநாட்டிற்கான திகதி அறிவிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

பொழுதுபோக்கு

நடிகை ஊர்வசியின் 700வது படம் ‘அப்பாத்தா’ ! வெளியான டிரெய்லர்

பிரபல நடிகை ஊர்வசி சமீப காலமாக சில சுவாரசியமான வேடங்களில் பல படங்களில் நடித்து வருகின்றார். நடிகை ஊர்வசி தனது 700 வது புதிய படமான ‘அப்பாத்தா’ மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் ‘அப்பாத்தா’ திரைப்படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளது. இத் திரைப்படம் நகைச்சுவை மற்றும் உண்மையான உணர்ச்சிப்பூர்வமாக கதைக்களத்தை வெளிப்படுத்துவதாக படத்தின் டிரெய்லர் அமைத்துள்ளது. சுரேஷ் பாலாஜே மற்றும் ஜார்ஜ் பயஸ் ஆகியோருடன் இணைந்து ஏ வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் புரொடக்‌ஷனின் கீழ் […]

இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறைகள் வர்த்தமானியில் அறிவிப்பு!

  • July 24, 2023
  • 0 Comments

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான 25 விடுமுறை நாட்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா

  • July 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது. திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் உணவுத் திருவிழா ஆரம்பமானது. உணவுத் திருவிழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ […]

உலகம்

சூடானில் விமான விபத்து! 9 பேர் பலி

சூடானில் ஏப்ரல் 15 முதல் சூடானின் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதனிடையே, போர்ட் சூடான் விமான நிலையத்தில் இருந்து சிவிலியன் விமானம் புறப்பட்டு விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிறுமி உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்டோனோவ் விமானம் நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அன்டோனோவ் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக […]

வட அமெரிக்கா

700 இந்திய மாணவர்களை ஏமாற்றியவர் கைது; வெளியான அதிர்சி தகவல்

  • July 24, 2023
  • 0 Comments

700 இந்திய மாணவர்களை ஏமாற்றி, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலைமையை ஏற்படுத்திய ஏஜண்ட், கடந்த மாதம் திருட்டுத்தனமாக கனடாவுக்குள் நுழையமுயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள்.அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் […]

இலங்கை

ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன!

  • July 24, 2023
  • 0 Comments

கடந்த ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்து பாவனை குறித்த சர்ச்சை நீடித்து வருகின்ற நிலையில், இன்று (24.07) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும்,  பதிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யும் மருந்துகளும் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்தால் அவை அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியக் கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 278 […]

error: Content is protected !!