ஐரோப்பா

பிரித்தானியாவில் பிரபல உணவுப்பொருள் ஒன்றில் நோய்க்கிருமிகள்;விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

மயோனேஸ் என்னும் உணவுப்பொருளில் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, அவை திரும்பப் பெறப்படுகின்றன.

பிரித்தானியாவின் பட்ஜெட் பல்பொருள் அங்காடியான Lidl கடைகளுக்கு, Potts Partnership Ltd என்னும் நிறுவனம் விநியோகிக்கும் மயோனேஸில் கிருமிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அதை அந்த நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது.

Potts’ Truffle Mayonnaise என்னும், 230g அளவுள்ள மயோனேஸ் பாக்கெட்களே திரும்பப் பெறப்படுகின்றன. 2024, ஜூலை best before திகதியும், 18823 என்னும் batch codeம் கொண்ட மயோனேஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான உணவுப்பொருள் ஒன்றில் நோய்க்கிருமிகள்: அவசர எச்சரிக்கை - லங்காசிறி  நியூஸ்

இந்த குறிப்பிட்ட விவரங்கள் கொண்ட மயோனேஸை வாங்கியவர்கள், அதை உண்ணவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அதை அருகிலுள்ள Lidl கடையில் கொடுத்து அதற்காக செலுத்திய பணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மயோனேஸ், Listeria monocytogenes என்னும் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.அதிக காய்ச்சல், உடல் வலி, உடல் நடுக்கம், வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை Listeria பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content