இலங்கை

சர்ச்சைகளுக்கு மத்தியில் வேலனை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக கடமையேற்ற கஸ்ரன் றோய்

  • July 27, 2023
  • 0 Comments

சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை நேற்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை சார்ந்தவரை நியமிக்காதே என கடந்த வாரம் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர். அதனை அடுத்து குறித்த விடயம் பேசுபொருளாகி இருந்தது. மத வாதங்களை முன் வைக்காதீர்கள் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் , பாடசாலையின் பாரம்பரியத்தை மீறி அதிபர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 245 பெண்களிடம் அத்துமீறல்கள்… வைத்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை!

  • July 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களில் பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் அவரது பாலியல் லீலைகள் வெளிவரத் தொடங்கின. கடந்த 2017ம் ஆண்டு பல பெண்கள், தாங்கள் ராபர்ட் ஹேடனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக குற்றம்சாட்டினர்.அவர்களில் சிலர் […]

பொழுதுபோக்கு

‘கங்குவா’… தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் அப்டேட்

  • July 27, 2023
  • 0 Comments

‘கங்குவா‘ படத்தை இரண்டு சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘கங்குவா’ மாறியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாஸாக நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி […]

பொழுதுபோக்கு

“உலகின் 5வது மிகப்பெரிய வைரம்” உண்மையை போட்டுடைத்த தமன்னா…

  • July 27, 2023
  • 0 Comments

தனது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அப்படத்திலிருந்து தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான ‘காவாலா’ நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’, ஜீ கர்தா […]

இலங்கை

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதி

  • July 27, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தனது பப்புவா நியூ கினியா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது பார்க்கப்படுகின்றது.

இலங்கை

இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம்

  • July 27, 2023
  • 0 Comments

இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கான அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதிதாக 40,000க்கும் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை

  • July 27, 2023
  • 0 Comments

McDonald’s உணவகச் சங்கிலி அடுத்த 03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட புதிய உணவகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள உணவகங்களும் மேம்படுத்தப்படும். இந்த முழு திட்டத்திற்கும் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். 1990களுக்குப் பிறகு எந்த நாட்டிலும் மெக்டொனால்டு உணவகச் சங்கிலியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டம் இதுவாகும் என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் செயல்படும் மெக்டொனால்டு உணவகங்களின் எண்ணிக்கை 1,100ஐத் தாண்டும் என்று […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வரலாறு காணாத நெருக்கடி – 22 ஆண்டுகள் கண்டிராத அளவு வட்டி விகிதம்

  • July 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் வரலாறு காணாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிக அளவில் உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் குறைக்க நிதி நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதமாகும். அது 5.5 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. அது 22 ஆண்டுகளில் காணாத உயர்வு என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். பணவீக்கத்தைச் சமாளிக்க இன்னும் அதிகளவில் வட்டி விகிதத்தை இந்த ஆண்டு […]

ஆசியா

தென் கொரியாவில் குவியும் மர்மப்பொட்டலங்கள் – சீனா விசாரணை

  • July 27, 2023
  • 0 Comments

தென் கொரியாவுக்கு மர்மப் பொட்டலங்கள் அனுப்பப்பட்டு வருவதாகக் கிடைத்த புகார்களைப் பெய்ச்சிங் விசாரிக்கிறது. சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான மர்மப் பொட்டலங்கள் தொடர்ந்து அனு்பபி வைக்கப்படுகின்றது. சில பொட்டலங்களில் அடையாளம் தெரியாத ஆபத்தான பொருள்கள் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பொட்டலங்கள் குறித்த விசாரணைக்கு உதவுமாறு தென் கொரியா கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தாங்கள் விசாரிப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். அனைத்துலக அளவில் சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள் தொடர்பில் காவல்துறை 2,793 புகார்களைப் பெற்றுள்ளதாக சோல் கூறியது. […]

இலங்கை

சவூதியிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசாங்கம்!

  • July 27, 2023
  • 0 Comments

இலங்கைக்கான சவூதி தூதுவரிடம், வெளிவிவகார அமைச்சு மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில், மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. குறித்த 3 பேர் கொண்ட சவூதி இராஜதந்திரிகள், அந்தநாட்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பெருமளவிலான மரங்களை நடும் திட்டத்திற்கு இலங்கையின் பயிரிடல் தொடர்பான அறிவினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தனர். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் சவூதி அரேபியாவிற்கான தென்னையை ஏற்றுமதி செய்து சில […]

error: Content is protected !!