ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு நெருக்கடி

  • July 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமூக உதவி பணம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சமூக உதவி பணமானது குறைந்த அளவில் கிடைக்க வேண்டும் என்று பயண் மாநிலத்தினுடைய ஆளும் கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கட்சியுடைய தலைவர் மார்கோ சுவிட் பத்திரிகையாளர் முன் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுக்கு பின்னர் அவர்களின் அகதி விண்ணப்பம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறையும் நெருக்கடி

  • July 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த வருடத்தில் இருந்து பாரிய பணவீக்கத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரெஞ்சுப் பொருளாதாரம் இவ்வருட ஆரம்பம் முதல் ஓரளவு சீரடைவைச் சந்தித்துள்ளது. ஏற்றுமதிக்கான வருவாய் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் ஜூன் மாதம் வரை 0.1 சதவீதத்தால் அதிகரித்த பொருளாதாரம் ஏழாம் மாதத்தில் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்த அளவை விட அதிகமாகும். பிரான்சில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும், வருவாய் அதிகளவு ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வீட்டு பாவனைப் […]

உலகம்

டுவிட்டர் கட்டடத்தின் மேல் ‘X’ – பாரிய சர்ச்சையில் சிக்கிய மஸ்க் – விசாரணைகள் ஆரம்பம்

  • July 30, 2023
  • 0 Comments

டுவிட்டர் என இதுவரை அழைக்கப்பட்ட நிறுவனத்தின் கட்டடத்தின்மேல் தற்போது X என்ற சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள பெரிய ‘X’ சின்னம் தொடர்பில் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின்மேல் எழுத்துக்களோ சின்னங்களோ பொருத்த உரிமம் பெற வேண்டும் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கட்டடத்தின் ஒரு பக்கம் இருந்த டுவிட்டரின் குருவி சின்னத்தை ஊழியர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர். நடைபாதையில் செல்லும் […]

இலங்கை

கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து விபத்து – பலர் படுகாயம்

  • July 30, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தின் ஓட்டுநர் தூக்கத்தில் வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

சுயிங்கம் மெல்பவரா நீங்கள்? உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 30, 2023
  • 0 Comments

வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதற்காக சுயிங்கம் மெல்லும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். சிலர் சுயிங்கம் சுவைப்பது பசியை கட்டுப்படுத்தும் என்று கருதுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உதவும் என்பது சிலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் உடல் எடை இழப்புக்கு சுயிங்கம் உதவாது. அதே வேளையில் உட்கொள்ளும் கலோரி அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்யும். சுயிங்கம் மெல்லுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம்! கலோரிகள் எரிக்கப்படும்: சுயிங்கம் மெல்லும் போது வாய் அடிக்கடி நகரும். அப்படி வாய் அசைபோடும்போது […]

இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்ற நிலை!

  • July 30, 2023
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் சுயவிபரங்களை சேகரிக்கும் பணிகளை அந்த மாநில விரைவுப்படுத்தியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இதுவரையில் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன் பல பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மணிப்பூரில் […]

உலகம் முக்கிய செய்திகள்

உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய வகை வைரஸ்

  • July 30, 2023
  • 0 Comments

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுளளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் 113 தனிப்பட்ட மாற்றங்களைக் கொண்ட புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜதார்த்தாவில் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கமைய, அந்த நோயாளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்த போது அந்த வைரஸ் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் சுமார் 37 வகை மாறுதல்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Android கையடக்க தொலைபேசிகளுக்கு அறிமுகமான ChatGPT

  • July 30, 2023
  • 0 Comments

OpenAI நிறுவனம் ChatGPT-3.5 வெர்ஷனை, Android பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். இனி இதனால் கையடக்க தொலைபேசி மற்றும் டேப்லெட்டுகளில் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதன் தற்போதைய சிறப்பு என்னவென்றால், இதுவரை ChatGPT-ஐ பிரவுசரில் மட்டுமே பயன்படுத்தும்படியாக இருந்து வந்த நிலையில், தற்போது Android பயனர்களும் செயலி வடிவில் அதைப் பயன்படுத்தும் வகையில் OpenAI வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு – வெளியேற்றப்பட்ட 2 பயணிகள்

  • July 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பிரிஸ்பேனைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 42 வயது நபர் ஒருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் விமானத்தில் சிகரெட் புகைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த 03 பயணிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என […]

அறிந்திருக்க வேண்டியவை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • July 30, 2023
  • 0 Comments

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மூளை செயல்பாட்டில் பாதிப்பு இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று நீண்டகால மூளை செயல்பாடு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காலப்போக்கில் அவர்களின் மூளை செயல் திறன் எவ்வாறு மாறியது என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொரோனா நோய்த் […]

error: Content is protected !!