Twitter இன் பெயர் மாற்றம் – புதிய சின்னத்தால் சர்ச்சை – அகற்றிய அதிகாரிகள்
Twitter என்று அழைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு புதிய பெயர் கட்டடத்தின்மேல் பொருத்தப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த பெரிய ‘X’ சின்னம் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள X நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் மேல் சென்ற வாரம் அந்தச் சின்னம் பொருத்தப்பட்டது. அது இரவில் பளிச்சென ஒளிர்ந்ததால் உள்ளூர் குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் அந்த பாதுகாப்புக் குறித்தும் அக்கறைகள் எழுந்தன. சென் பிரான்சிஸ்கோ நகர் அதன் தொடர்பில் 24 முறைப்பாடு […]













